Categories
லைப் ஸ்டைல்

இல்லத்தரசிகளுக்கான சில பயனுள்ள டிப்ஸ்..!!

இல்லத்தரசிகளுக்கான சில பயனுள்ள வீடு குறிப்புகள் பற்றி பார்ப்போம்.

1. அரை டம்ளர் தண்ணீரில் ஷாம்பூ போட்டுக் நன்றாக கலக்கி அரைமணி நேரம் கழித்த பின் அதில் வெள்ளி கொலுசுகளைப் போட்டுக் கசக்கி, பின்னர் சுத்தமான தண்ணீரில் தேய்த்துக் கழுவி, ஈரம் போனதும்  துடைத்து எடுத்தால் கொலுசு பளபளவென்று மாறிவிடும்.

2. வெள்ளி ஆபரணங்கள் மற்றும் வெள்ளி குத்துவிளக்கு, வெள்ளி சார்ந்த பொருட்களுடன் 3 கற்பூரத்தைப் போட்டு வைத்தால் அவைகள் கறுப்படைவதை தவிர்த்துவிடலாம்.

3. காமாட்சி விளக்கு மற்றும் குத்துவிளக்கின் மேல் நுனியில் பூ வைக்கும்பொழுது ரப்பர் பேண்டைச் சுற்றி வைத்தால் வைக்கும் பூ கீழே விழாமல் இருக்கும்.
4.  புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையும்,  வெள்ளி நகைகளையும் அரைமணி நேரம் ஊறப்போட்டு பின்னர்  எடுத்தால்  புதியது போன்று  அவை
புதியவை போல் இருக்கும்.
5. கல் பதிக்காத நகைகளை ஆல்கஹாலில் போட்டு முக்கி எடுத்து துடைத்தால் அவை பளபளப்பாக மாறிவிடும்.  கல் பதித்த நகைகளை ஆல்கஹாலில் முக்கி எடுக்காதீர்கள்.

Categories

Tech |