Categories
ஆன்மிகம் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…..! வேலைச்சுமையும் தன்னம்பிக்கையும் கொண்ட நாள்….

துலாம் ராசி நண்பர்களே…..வழக்கத்திற்கு மாறான பணி உங்களுக்கு தொந்தரவைக் கொடுக்கும். குடும்ப உறுப்பினர் தேவையான உதவிகளை வழங்க கூடும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனமே போதுமானது உற்பத்தி விற்பனை சுமாரான அளவில் இருக்கும்.

பெண்கள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மனதில் இனம் தெரியாத பயம் அவ்வப்போது வந்து செல்லும் அந்த நேரத்தில் இறைவழிபாட்டில் மனதைச் செலுத்துவது நம்பிக்கையை கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் நன்மையும் கொடுத்தவர்களுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களுக்கு சாதனைகள் செய்யும் காலமாக இருக்கும் மேலிடத்திலிருந்து உங்களுக்கு மதிப்பும் பாராட்டுகளும் கிடைக்கும்.

பணம் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட வேலையில் இருப்பவர்கள் கவனமுடன் கையாளவும். இன்று எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசனை செய்யுங்கள் பெரியோர்களிடம் ஆலோசனையும் செய்யுங்கள். இன்று உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் உற்சாகமாகவே காணப்படுவீர்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது இளம் சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுவது ரொம்ப நல்லது.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்கள் :2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்

 

Categories

Tech |