சிம்ம ராசி அன்பர்களே..! இன்று எவரிடமும் நிதானித்து பேசுவது ரொம்ப நல்லது. தொழில் வியாபார வளர்ச்சி பெற புதிய அணுகுமுறை உதவும். அளவான பணவரவு கிடைக்கும். தியானம் செய்வதால் மனம் புத்துணர்ச்சி ஏற்படும். பாதுகாப்பு குறைந்த இடங்களில் தயவுசெய்து செல்ல வேண்டாம். மற்றவரிடம் அனுசரித்துச் செல்லுங்கள். நண்பரிடம் பகை கொஞ்சம் ஏற்படலாம். அவர்களிடம் கொஞ்சம் பார்த்துப் பேசுங்கள். பணப்புழக்கம் சரியாக இருக்கும். ஆனால் சுப நிகழ்ச்சிகளுக்கான செலவு செய்ய வேண்டிய சூழல் இன்று இருக்கிங்க.
தூங்கும் போது ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். பொருட்களை பத்திரமாக பார்த்துக்கொள்வது ரொம்ப நல்லது. யாருக்கும் இன்று ஜாமீன் கையெழுத்து போட கூடாது. அப்படி போட்டால் சில பிரச்சினைகள் நீங்கள் சந்திக்க கூடும். கூடுமானவரை வாகனத்தில் செல்லும் போது ரொம்ப கவனமாக தான் செல்ல வேண்டும். இன்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் மட்டுமே இன்றைய நாளை சிறப்பான நாளாக மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். கூடுமானவரை இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள்.
கணவன் மனைவிக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லைங்க. குடும்பத்தை பொறுத்த வரை சிறப்பான சூழ்நிலையே நிலவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு ஓர் அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் மஞ்சள் நிறம்