மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும் சில நடிகைகள் முன்னணி நடிகைகளாக திகழ்கின்றனர். இந்நிலையில் மலையாள நடிகை லிஜோ மோள், புதிய படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
மேலும் இப்படத்தில் லிஜோ மோளுக்கு தம்பியாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். லிஜோவுக்கு ஜோடியாக சித்தார்த் டிராபிக் போலீஸ் வேடம் ஏற்று நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் பைக் ரேஸராக நடிக்கிறார். மேலும் காஷ்மீரா, மதுசூதனன், யூடியூப் குழு நடிகர்கள் உள்பட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடந்து வருகிறது.