காலங்களில் பரிணாம வளர்ச்சியின் நோய்களும் மனிதனை தோற்ற தொடங்கினார். அதன் வரலாற்றை தெரிந்துகொள்ள முதன் முதலாக கிபி இரண்டாம் நூற்றாண்டில் செல்ல வேண்டியிருக்கிறது.
உலகம் கடந்து வந்த கொள்ளை நோய் வரிசையில் உள்ளங்கையில் மனித சமூகத்தை கொண்டுவந்து முகக் கவசத்தை போட வைத்துவிட்டது கொரோனா. அந்த கொரோனாவின் கொடிய குணத்தை இன்று பல வகைகளில் அறிந்துகொண்டு தனித்திருக்கும் சூழலுக்குத் தள்ளப் பட்டிருக்கிறோம். ஆனால் இது போன்ற கொள்ளை நோய்கள் காலங்காலமாக மனித குலத்தை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றன. அவை
அன்டைன் பிளேக்
சுமார் 50 லட்சம் உயிர்களை பலிவாங்கி கொண்ட இந்த கொள்ளை நோயின் பெயர் அன்டனைன் பிளேக் என்று நாங்களே கிபி 165 ஆவது ஆண்டில் மனித சமூகத்தை முதன்முதலாக தாக்கிய கொள்ளைநோய் இதுதான் என்று அறியப்படுகிறது. இது சீனாவிலிருந்து பட்டு பாதை வழியாக ரோமிற்கு சென்றிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ரோமப் பேரரசு ஆட்சி அதிகாரம் கொடி கட்டி பறந்த பகுதிகளில் இந்த நோய் பரவியது ரோமை படை மெசபடோமியா வரை படையெடுத்துச் சென்று திரும்பிய போது இந்த தொற்று பரவியதாக அறியப்படுகிறது.
பெரிய அம்மை என்று அழைக்கப்படும் இந்த வைரஸ் எப்படி தோன்றியது என்ற மனிதனை எப்படித் தோன்றியது என்றும் இன்னமும் அறியப்படவில்லை. எனினும் இது குறித்து ஆய்வு செய்த கிரேக்க மருத்துவர் கேலன் என்பவரின் பெயரால் இந்த கொள்ளை நோய் முதலில் அழைக்கப்பட்டது.கிபி 165 முதல் 5 ஆண்டுகள் வரை ரோமை அரசை ஆட்டுவித்த இந்த கொள்ளை நோயால் பீடிக்கப்பட்டு இரண்டாம் லூசியஸ் மற்றும் மார்க்கஸ் அரேலியஸ் அன்டன்னஸ் என்ற இரு அரசர்கள் உயிரிழந்தனர். அன்டன்னசை நினைவு கூறும் வகையில் இந்த நோய்க்கு அன்டைன் பிளேக் என்று பெயரிடப்பட்டது.
சுமார் 5 ஆண்டுகள் நீடித்த இந்த நோயின் காரணமாக சுமார் 50 லட்சம் மக்கள் உயிரிழக்க நேரிட்டது அதாவது ரோமைப் பேரரசில் வாழ்ந்த மூன்றில் ஒரு பங்கினர் இந்த நோய்க்கு பலியாகினர். குறிப்பாக ரோமை படைவீரர்களை பலரது உயிரை இந்த நோய் காவு கொண்டது. ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் நோய் கட்டுப்படுத்தப்பட்டது என்று ரோம அரசுக்கு பெருமூச்சு விட்டது ஆனால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தோன்றியது என்றாலும் சுமார் 2 ஆயிரம் உயிர்களை மட்டுமே குடித்துவிட்டு ரோமானிய தேசத்தை விட்டு அகன்றது.
ஜஸ்டீனியன் பிளேக்
கிபி 541 ஆம் ஆண்டில் மிகப்பெரிய அளவில் கொள்ளை நோய் ஏற்பட்டு மனித குலத்தை குழைத்துப் போட்டது அதன் பெயர் ஜஸ்டீனியன் பிளேக் ஐரோப்பாவின் அச்சுறுத்தல் என்று அறியப்படும் இந்த நோய் கிழக்கு ரோம அரசின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளை பெரிதும் தாக்கியது. எர்சீனியா பிரஸ்டிஸ் என்ற பாக்டீரியா கிருமிகள் எலிகளின் உடலில் காணப்படும் உண்ணிகள் மூலமாக மனிதனுக்குத் தொற்றியது. எலிகளை கடித்த உண்ணிகள் பிறகு மனிதன் கடிக்க தொடங்கின.
குறிப்பாக மத்திய தரைக்கடல் துறைமுகப் பகுதிகளில் அதிகமாக எலிகள் காணப்பட்டதால் அங்கு தோற்று பலருக்கு பரவியது. கழுத்து இடுப்பு கக்கம் ஆகிய உடலின் பாகங்களில் கட்டிகள் உருவாகின. இந்த நிணநீர் கட்டிகள் பின்னர் உடலின் பல பகுதிகளுக்கும் பரவும் அபாயம் கொண்டது.கிழக்கு ஐரோப்பாவில் இந்த நோய் காரணமாக சுமார் 25 மில்லியன் அதாவது இரண்டு கோடியே 50 லட்சம் பேரின் உடலை தின்று தீர்த்தது இந்த கொடிய வைரஸ். கிழக்கு ஐரோப்பாவின் பைசன்டன் என்ற பேரரசை நிர்மூலமாக்கிய நோய் 40 விழுக்காடு மக்கள் தொகையை விளங்கியதாக கருதப்படுகிறது.
அப்போது அந்த பேரரசின் தலைநகராக விளங்கிய கான்ஸ்டினோபில் மட்டும் நாளொன்றுக்கு 5000 பேர் மடிந்தார்கள்.இந்த நகர் தான் இப்போதைய துருக்கி நாட்டின் தலைநகராக விளங்கும் இஸ்தான் புல் துறைமுக நகரம். அப்போது அந்த பகுதி ஆண்டுகொண்டிருந்த ஜஸ்டீனியன் என்னும் அரசன் இந்த நோயை கட்டுப்படுத்த முடியாமல் பெரும் பொருளியல் சிக்கலுக்கு ஆளாகினான் இந்த வைரஸின் வாரிசு தான் பின்னாளில் மனித குலத்தை அச்சுறுத்தி கருப்பு மரணம் என்று வர்ணிக்கப்படும் பிளேக் என்று காலம் அடையாளப்படுத்தியது.
கருப்பு மரணம்
1346 ஜஸ்டீனியன் பிளேக் அடுத்து ஐரோப்பா ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளைத் நிலைகுலைய வைத்த பிளேக் நோயை கருப்பு மரணம் என்று வரலாறு தெரிவிக்கிறது. காரணம் 1346 தொடங்கி 1353 வரைக்கும் 3 கண்டங்களில் உள்ள மக்களையும் மூர்க்கத்தனமாக கொன்று போட்டது இந்த வைரஸ். மத்திய ஆசியாவிலிருந்து பட்டுப் பாதை வழியாக ஐரோப்பா மற்றும் ஆசிய பகுதிகளுக்கு சென்றது தான் இந்த வைரஸ். அதுவரைக்கும் ஒரு பகுதிக்குள் சுற்றிவந்த தோற்று இந்த முறை கண்டம் விட்டு கண்டம் நகர்ந்து தோன்றியது.
கடல் கடந்து வணிகம் பெருகிய காலம் அது. கடல் மார்க்கமாக பொருட்கள் கண்டம் விட்டு கண்டம் செல்லும்போது கூடவே எலிகளும் பயணித்தன. வணிகத் துறைமுகங்களே ஒரு நாட்டின் வாயிற்கதவாக இருந்த காரணத்தால் துறைமுக நகரங்களே முதலில் இந்த நோய்க்கு இலக்காகும். இடுப்பு கழுத்து ஆகிய பகுதிகளில் கொப்புளங்களை ஏற்படுத்தி 7 நாட்களில் கூட உயிரை பறித்துக் கொண்டது இந்த வைரஸ். சில கொப்புளங்கள் ஆப்பிள் பழ அளவுக்கு சில முட்டைகள் அளவுக்கும் உப்பும் தன்மை கொண்டன.
சுமார் 7.5 கோடியில் இருந்து 20 கோடி உயிர்கள் இந்த கொலை நோய்க்கு பலியாகினர். இறந்த மக்களை புதைப்பது பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. குவியல் குவியலாக பிணங்கள் புதைக்கப்பட்டன. பெற்றோர்கள் தங்கள் கரங்களாலேயே தங்கள் பிள்ளைகளை மண்ணுக்கு அர்ப்பணித்தார்கள். அதுவரைக்கும் இந்த உலகத்தையே ஆட்டிப் படைத்த உலகப்போரில் உயிரிழந்தவர்களின் காட்டிலும் இந்தக் கிருமி தின்ற உயிர்கள் அதிகம் என்பதால் இதை கருப்பு மரணம் என்றார்கள்.
காலரா
காலரா தொற்று ஒன்று தோன்றியிருப்பதாக அதுவும் இந்தியாவின் கங்கைவெளி சமவெளியில் தோன்றி இருப்பதாக செய்தி ஒன்று உலகம் முழுக்கப் பரவியது. செவிவழி செய்தியாக உலகம் சுற்றிக் கொண்டிருந்த அந்தத் தொற்று பின்நாளில் உலகம் முழுக்க கோடிக்கணக்கான மனித இனங்களை புதைக்கும் கொள்ளை நோயாக மாறியது. 1817 ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்த கொள்ளை நோய் இப்போது வரைக்கும் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. 2018 ஆம் ஆண்டில் கூட ஜிம்பாப்வே நாட்டில் காலரா ஏற்பட்டு 48 பேர் உயிரிழக்க நேரிட்டது. அந்த காலராவின் கோர முகத்தை திரும்பி பார்த்தால் அது உலகம் முழுக்க சுமார் 47 நாடுகளை எப்படி நாரு நாராய் கிழித்து போட்டது என்பதை அறிய முடியும்.
இந்தியாவில் இருந்துதான் தொடங்குகிறது. இலத்தீன் மொழி வேர்ச் சொல்லாக கொண்ட காலரா என்ற இந்த கொள்ளை நோய் நிவிரோ நிஸியா என்ற பாக்டீரியா மூலம் பரவும் ஒரு வாந்தி பேதி நோய் அசுத்த நீர் மற்றும் உணவை உண்பதால் இது ஏற்படுகிறது அது போன்று குறிப்பிட்ட கடல் பொருட்களை உண்பதாலும் அது ஏற்படுகிறது என்று கருத்தும் நிலவியது. ஆனால் பல காலமாக இந்தத் தொற்று எப்படி ஏற்படுகிறது என்று பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் அறிவியல் உலகில் உலாவின சூழல் கேடு மற்றும் வருமை தான் இந்த நோய் ஏற்படுவதற்கு காரணம் என்று பிரான்ஸ் நம்பியது. ரசிய நாட்டவர்கள் இந்த தோற்றது எப்படி பரவுகிறது என்று தெரியாமல் தலையை சொறிந்து கொண்டனர்.
அமெரிக்கா நாட்டில் புதிதாக குடியேறியவர்களை கைநீட்டி காட்டியது. இது பிரிட்டிஷ் துறைமுகம் மூலம் வந்த துயரம் என்று அயர்லாந்து வாசிகள் கூறினார்கள். பிரிட்டிஷ் காரர்கள் தெய்வ குற்றம் என்று கடவுளின் மீது பாரத்தைப் போட்டார்கள். இறுதியாக பிரிட்டிஷ் மருத்துவ ஆய்வாளர்கள் ஜான் ஸ்நோ என்பவர் அதெல்லாம் இல்லை இது அசுத்தமான நீரால் பரவும் தொற்று என்று முற்றுப்புள்ளி வைத்தார். இந்த தொற்று பிற கொள்ளை நோய்களை போன்ற மோசமான குணங்களைக் கொண்டது. காட்டுத்தீ போல சடுதியாக தொற்றிக்கொள்கிறது. தீராத வயிற்றுப்போக்கு தான் இதன் அறிகுறி அத்தோடு குமட்டலும் வாந்தியும் ஏற்படுகிறது. இது தொடர்ந்து ஐந்து நாட்கள் வரை இருக்கும் பட்சத்தில் நோயாளி மரணமடைய நேரிடுகிறது.
வெளிரிய வண்ணத்தில் வயிற்றில் இருந்து நீரானது நாளொன்றுக்கு சுமார் 15 முதல் 20 லிட்டர் வரைக்கும் தொடர்ந்து வெளியேறுகிறது. தடுப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால் உடல் சோர்ந்து உதடுகள் வாடி உடல் நீலம் மற்றும் சாம்பல் நிறத்திற்கு மாறி மரணத்தின் வாசல் வரைக்கும் கொண்டுபோய் விடுகிறது. ஒருவருக்கு ஏற்பட்ட தொற்று சடுதியாக பற்றிக்கொள்வதால் அதன் தாக்கம் கொடூரமாக இருக்கிறது. காலரா தான் பல்வேறு காலகட்டங்களில் இந்த உலகத்தை உலுக்கிய உயிர்க்கொல்லி என்று சொன்னால் மிகையாகாது. இந்த கொள்ளை நோய் 7 கண்டத்தின் பல பகுதிகளை ஏழு கட்டங்களாக வாட்டி எடுத்தது.
முதல் காலரா (1817 – 1824)
1817 ஆம் ஆண்டு இந்தியாவின் வடபகுதியில் கங்கைச் சமவெளியின் என்ற ஊரில்தான் ஏற்பட்டது. இந்த பகுதி இப்போது வங்கதேசத்தின் கையில் உள்ளது அது பின்னர் படிப்படியாக பல பகுதிகளில் பற்ற தொடங்கியது. முதலில் பாதிப்பு அதிகம் இல்லை என்று கருதினாலும் 1820 ஆம் ஆண்டு வாக்கில் அது இந்தியாவின் பல பகுதிகளுக்கு பரவியது. பிரிட்டிஷ் அரசாங்கம் பொருள் சேர்க்கும் நோக்கத்துடன் போடப்பட்ட வணிக பாதை வழியாக அந்த தோற்று இந்தியாவின் பல பகுதிகளில் பரவியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தனர். இந்த காலராவுக்கு நூற்றுக்கணக்கான பிரிட்டிஷ் படையினரும் பலியானதால் அனைவரும் இந்த காலராவை கண்டு மிரண்டு போனார்கள்.
அத்தோடு இந்த நோய் இந்தியாவோடு நின்று போகவில்லை இந்திய பொருட்களை சுரண்டிக் கொண்டு கடல் மார்க்கமாக வணிகத்தை விரித்து கொண்டு சென்ற பிரிட்டிசாரின் கடல் வழியாக இந்த நோய் மியான்மர், இந்தோனேசியா, சீனா, இலங்கை நாடுகளுக்கும் சென்றது. ஜாவா தீவில் மட்டும் ஒரு லட்சம் பேரை காவு கொண்டது. அப்படியே அந்த நோய் ஐரோப்பாவிலும் நுழைந்தது. எப்படியோ ஒரு வழியாக இந்த வயிற்றுப்போக்கு நோய் மறைந்துவிட்டது என்று பெருமூச்சு விட்ட காலத்தில் மீண்டும் இரண்டாவது முறையாக 1829 ஆம் ஆண்டில் காலரா சொல்ல வந்தது.
இரண்டாம் காலரா (1829-1837)
1829 ஆம் ஆண்டு தலை தூக்க தொடங்கிய கலராக ரஷ்யா, ஹங்கேரி, ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் பல நாடுகளைப் தொற்றின. பாரிஸ் நகரத்தை தாக்கத் தொடங்கிய காலராவை அங்குள்ளவர்களின் கிங் காலரா என்று மன்னர் பட்டம் சூட்டி அழைத்தார்கள். பாரிஸில் மட்டும் 20 ஆயிரம் பேர் உயிரிழக்க நேரிட்டது. மொத்த பிரான்சிலும் சுமார் ஒரு லட்சம் பேரை கொன்ற இந்த வயிற்றுப்போக்கு நோய் வட அமெரிக்காவில் நுழைந்து வாஷிங்டன் வரை தோற்றி இறுதியாக மெக்சிகோ வரை சென்றது.
மூன்றாவது காலரா (1846-1860)
இரண்டாவது காலரா அடங்கிவிட்டது என்று உலகம் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த நேரத்தில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு 1846 ஆம் ஆண்டு மீண்டும் காலரா கொலை கூத்து நடத்தத் தொடங்கியது. 14 ஆண்டுகளில் உலகம் முழுக்க நடந்த காலராவை ஊழிக்கூத்து காரணமாக லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ரஷ்யாவில் மட்டும் 10 லட்சம் பேர் மடிந்தனர். மக்காவுக்குச் சென்று ஹஜ் பயணிகள் 15,000 பேர் உயிரிழந்தனர். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களில் 52 ஆயிரம் பேர் காலராவுக்கு காலமானார்கள்.
அமெரிக்காவை தோற்றிய காலராவின் காரணமாக அப்போதைய அதிபர் மரணமடைந்தார் என்ற செய்தி அப்போது உலகம் முழுக்க பேசப்பட்டது.இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து கொடிகளை ஏற்றிக்கொண்டு சென்ற கப்பல் மிசிஸ்ஸிப்பி நதி மார்க்கமாகச் சென்று அங்கு உள்ள பகுதிகளில் தொற்றை ஏற்படுத்தியதாக அமெரிக்கர்கள் குற்றம் சாட்டினார்கள். அமெரிக்காவில் ஒன்றரை லட்சம் பேரும் மெக்சிகோவில் 2 லட்சம் பேரும் காலராவால் மடிந்தார்கள். அப்படியே வெனிசுலா மற்றும் பிரேசில் வரைக்கும் காலரா தொற்று ஏற்பட்டது. மேற்கு மார்க்கமாக ஒருபுறம் காலரா பரவி கொண்டிருக்க ஈரான், ஈராக், அரேபியா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் பரவிக் கொண்டிருந்தது.
இந்த காலகட்டத்தில்தான் காலரா நீர் மூலமாக பரவுகிறது என்ற உண்மையை 1854 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மருத்துவர் ஜான் ஸ்நோ நிரூபித்தார். இங்கிலாந்து நாட்டிலுள்ள ஒரு குடிநீர் குழாய் மூலமாக வந்த அசுத்தமான நீரை சோதித்த அவர் அந்த குழாயின் கைப்பிடியை மாற்றுமாறு கேட்டுக்கொண்டார். காலராவுக்கு ஸ்பெயினில் மட்டும் 1854 இல் இருந்து ஓராண்டிற்குள் 2 லட்சத்து 36 ஆயிரம் பேர் மடிய நேரிட்டது. காலராவுக்கான கல்லறைகள் இந்த நாடுகளில் பெருகிக் கொண்டே செல்லும் அளவுக்கு மூன்றாவது காலகட்டம் இந்த உலகத்தை மரணம் கலக்கத்தோடு கடந்து சென்றது.
நான்காவது காலரா (1863-1875)
நான்காவது காலரா கொள்ளைநோய் 1863 முதல் இந்தியா, நேபாளம் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளை கலைத்து போட்டது. 1866 ஆம் ஆண்டில் ஆஸ்ட்ரோ ரஷ்ய போர் நடந்துகொண்டிருந்தபோது காலரா ஏற்பட்டதன் காரணமாக படையினர் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் உயிரிழந்தார்கள். 1867 ஆம் ஆண்டு இத்தாலியில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேரையும் இறுதியாக 1875 ஆம் ஆண்டு அடங்கியது காலராவின் நான்காம் ஆட்டம்.
ஐந்தாம் காலரா
1881 ஆம் ஆண்டு 5 ஆவது முறையாக இந்தியாவில் தொடங்கி ஐரோப்பா மற்றும் அமெரிக்கா வரைக்கும் பரவியது இந்தக் கொள்ளை நோய். குறிப்பாக இந்த ஐந்தாவது அவதாரம் ஐரோப்பிய நாடுகளில் வெகுவாக பாதிப்புக்கு உள்ளாக்கியது.
ஆறாவது காலரா (1899-1923)
இந்த காலகட்டத்தில்தான் ஆறாத வடுக்களை ஏற்படுத்துவதோடு காலரா காரணமாக இந்தியாவில் சுமார் 8 லட்சம் மக்கள் உயிரிழந்தார்கள். இந்தியா வளைகுடா நாடுகள் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியது. ஆனால் இந்த காலகட்டத்தில்தான் பாக்டீரியா பற்றிய விழிப்புணர்வை உலகம் மக்களுக்கு ஏற்பட்டது.
ஏழாம் காலரா (1961-1975)
இந்த நோயால் இந்தோனேசியா கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த கொள்ளை நோயை எல் தார் என்று அவர்கள் அழைத்தார்கள். காலரா நோய் ஏற்பட்ட காலங்களில் முக்கியமானவை இந்த ஏழு காலகட்டங்கள் தான் என்றாலும் அது இன்னும் முழுமையாக இந்த உலகத்தை விட்டுச் செல்லவில்லை. இந்தியாவில் ஒரு கட்டத்தில் காலரா என்பது கழகத்தின் மாதிரியாக இருந்தது. ஆனால் இப்போது இந்த பயம் இல்லை.
ஐரோப்பிய நாடுகளில் மறைந்து விட்டாலும் இன்னமும் ஆப்பிரிக்க நாடுகளில் இந்த தொற்று தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தடுப்பு மருந்துகளின் துணையோடு காலரா இந்த கொள்ளை நோயில் இருந்து உலகம் விடுபட்டாலும் ஆப்பிரிக்க நாடுகளின் குறிப்பிட்ட பகுதிகளில் அவ்வப்போது தலை தூக்குகிறது. கடந்த காலங்களைப் போல் கொத்துக்கொத்தாக உயிர்களை கொல்லவில்லை என்றாலும் அது முழுமையாக அளிக்கப்படவில்லை என்பதே உண்மை.