Categories
உலக செய்திகள்

உலகத்துக்கே குட் நியூஸ் : 4 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர் ..!!

உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 லட்சம் பேர் குணமடைந்துள்ளது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

 

நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1,780,271 பேர் பாதித்துள்ளனர். 108,822 பேர் உயிரிழந்த நிலையில், 404,029 பேர் குணமடைந்துள்ளனர். 1,216,828 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 50,592 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.

 

கொரோனா வைரசால் தாக்க்கி சிகிச்சை பெற்று வந்த 4 லட்சம் பேர் குணமடைந்துள்ளது உலக மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளாய்த்து. கொரோனா வந்தால் மரணம் நிச்சம் என்று கிடையாது. உரிய சிகிச்சை பெற்று நாம் குணமடையலாம் என்பதை குணமடைந்தவர்கள் உணர்த்தியுள்ளார். அதில் சீனாவில் 77,525 பேரும், ஸ்பெயினில் 59,109 பேரும், ஜெர்மனியில் 57,400 பேரும், ஈரானில் 41,947 பேரும், இத்தாலியில் 32,534 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Categories

Tech |