Categories
உலக செய்திகள்

6 நாளில் 11,717 பேர் மரணம்…. அமெரிக்காவில் பலி 10ஆயிரத்தை தாண்டியது …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் அமெரிக்காவில் கடந்த 6 நாட்களில் மட்டும் 11,717 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

कोरोना: पिछले 24 घंटे में चीन में 8 तो ...

நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1,780,271 பேர் பாதித்துள்ளனர். 108,822 பேர் உயிரிழந்த நிலையில், 404,029 பேர் குணமடைந்துள்ளனர். 1,216,828 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 50,592 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.

Coronavirus, Corona, First Death In Italy, Iran, Wuhan, WHO ...

 

உலக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடும் விளைவுகளை சந்தித்துள்ளது. கடந்த 6 நாட்களில் 11,717 பேரை இழந்துள்ளது. இதனால் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 20,577ஆக உயர்ந்துள்ளது. 532,879 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 30,453 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 481,849 மருத்துவமணையில் இருக்க்கும் நிலையில் 11,471 பேரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கின்றது.

 

அங்கு கடந்த 7ம் தேதி 1973 பேரும், 8ம் தேதி 1943 பேரும், 9ம் தேதி 1,901 பேரும், 10ம் தேதி 2035 பேரும், 11ம் தேதி 2,035 பேரும், 12ம் தேதி 1,830 பேரும் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |