Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

பெற்றோர்களே..! குழந்தைகளுக்கு கொரோனா குறித்த அச்சத்தை இவ்வாறு போக்குங்கள்..!!

குழந்தைகளுக்கு கொரோனா குறித்து அன்பாக விளக்கம் கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும்.

உலகையே அச்சுறுத்தும் கொரோனா நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளையும் பயமுறுத்துகிறது. அவர்களுக்கு சுற்றி என்ன நடக்கிறது, ஏன் யாரும் வெளிய செல்லக்கூடாதென்று கூறுகிறார்கள் என்ற குழப்பத்தில் இருப்பார்கள். அப்பொழுது நம்முடைய பேச்சுகளும் நடவடிக்கைகளும் மாறுபடும், பதட்டத்தோடும் செயல்படுவோம்.

அதையெல்லாம் குழந்தைகள் பார்த்து மேலும் அச்சமடைவார்கள். அதனால் இந்த பயம்கூட அவர்களுக்கு மிகப்பெரிய கொடிய நோயாகும் என்பதை துளி அளவில் கூட மறந்துவிடாதீர்கள். இதனால் குழந்தைகளுக்கு நாம்தான் சுற்றி என்ன நடக்கிறது என்ற நிலையை அன்பாக எடுத்து சொல்ல வேண்டும்.

அவர்கள் கேட்டாலும் நாம் உதாசீனம் செய்யாமல் கொரோனா பற்றிய விவரங்களை எடுத்து சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கு முதலில் உங்களுக்குத் தெளிவான புரிதல் மிக முக்கியம். நீங்கள் COVID-19 என்றால் என்ன.? அது எந்த மாதிரி அளவில் பரவும், எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்திருக்க வேண்டும்.

அதன் பிறகே உங்களது பிள்ளைகளுக்கு புரியும்படி எடுத்து கூற முடியும். உங்களது குழந்தைகள் கொரோனா பற்றிய எந்த கேள்வி உங்களிடம் கேட்டாலும் அதற்கு கொஞ்சம் கூட தளராமல் பதிலளிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களின் மனதில் தோன்றக்கூடிய பயம் நீங்கும். அதேபோல் கொரோனா சம்மந்தமாக நிறைய வதந்திகளும் பரவி வருகிறது.

அதுபோன்ற செய்திகளை படித்து விட்டு வீட்டில் பயமுறுத்தும் வகையில் குழந்தைகளிடம் பேசவேண்டாம். அடுத்ததாக சுகாதாரமாக இருக்க வேண்டும், அடிக்கடி கை கழுவ வேண்டும், தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், அடிக்கடி முகம், வாய், மூக்கைத் தொடாமல் இருக்க வேண்டும், இது போன்ற அவசியத்தையும் குழந்தைகளிடம் பேசுவது மிகவும் அவசியம்.

 

 

Categories

Tech |