சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 190க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. அதிகமான பாதிப்பை பெற்றுள்ள அமெரிக்காவில் மட்டும் கொரோனா வைரஸ் 5,33,351 பேரை பாதித்துள்ளது. 20,583 பேர் இறந்துள்ள நிலையில் 30,502 குணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதித்த 4,82,033 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 11,471 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்குள்ள நியூயார்க்கில் மட்டும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள நியூயார்க்கில் மட்டும் 1,81,144 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதில் 8,627 பேர் உயிரிழந்துள்ளனர். 1,55,840 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்தபடியாக நியூ ஜெர்சியில் 58,151 பேர் கொரோனா நோய் தொற்றில் பாதிக்கப்பட்டு 2,183 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 55,286 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதனை தொடர்ந்து மிச்சிகன் 23,993 பேர் பாதிக்கப்பட்டதில் 1,392 பேர் உயிரிழந்து 22,158 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நான்காவது அதிகம் பாதித்த பகுதியாக உள்ள மாசாச்சூசெட்ஸ் 22,860 பேர் பாதிக்கப்பட்டதால் 686பேர் உயிரிழந்துள்ளனர். 21,445 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஐந்தாவதாக கொரோனாவில் அதிகம் பாதித்த பகுதியாக உள்ள கலிபோர்னியா 22,645பேர் பாதிக்கப்பட்டதில் 636 பேர் உயிரிழந்து, 20,836 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.