தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் என்று 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை எளிதில் அடையாளம் காணக்கூடிய வகையில் சிவப்பு, மஞ்சள் பச்சை என்று பிரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் புதிதாக 58 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 969 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் ஒருவர் பலியான நிலையில் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து நேற்று முதல் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 34 மாவட்டங்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்டோர் போரால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு நிற குறியீடு, 11ல் இருந்து 19 பேர் வரை பாதிக்கப்பட்டிருந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற குறியீடு, 11க்கும் கீழ் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பச்சை நிற குறியீடு கொடுக்கப்பட்டிருக்கிறது.
சிவப்பு நிற மாவட்டங்கள் :
சென்னை, கோவை, ஈரோடு, நெல்லை, திண்டுக்கல், நாமக்கல், செங்கல்பட்டு, தேனி, திருச்சி, ராணிப்பேட்டை திருவள்ளூர், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, நாகை, கரூர், விழுப்புரம் ஆகிய 17 மாவட்டங்களும் சிவப்பு நிற பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு நிற மாவட்டங்கள் :
விருதுநகர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, வேலூர், திருவாரூர், சேலம், திருப்பத்தூர், கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்கள் ஆரஞ்சு நிற பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
மஞ்சள் நிற மாவட்டங்கள் :
காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், கள்ளகுறிச்சி ஆகிய மாவட்டங்கள் மஞ்சள் நிற பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.