Categories
அரசியல்

“தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை அரசே ஏற்கும்”… பீலா ராஜேஷ்!  

தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்று சுகாதாரத்துறை செயலாளர்  தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கின்றது. நேற்று  தமிழகத்தில் 58 பேருக்கு கொரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்,  பாதிப்பு எண்ணிக்கை 969 ஆக இருந்தது.

இந்த நிலையில் சுகாதாரத்துறை செயலாளர்  பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆக 1,075 அதிகரித்துள்ளது. இதில் 50 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தாலும் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை அரசே ஏற்கும். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,075 பேரில், 971 பேர் ஒரே இடத்தோடு தொடர்புடையவர்கள்.  தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Categories

Tech |