தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 969 இல் இருந்து 1075 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை 50 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 23 பரிசோதனை ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் 14 ஆய்வகமும், தனியாரில் 9 ஆய்வகங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.தனியார் ஆய்வகத்தில் பரிசோதனை செய்தால் அதற்கான செலவை அரசே ஏற்கும். தமிழகத்தில் மருத்துவர்கள் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று பீலா ராஜேஷ் தெரிவித்தார்.