Categories
பல்சுவை

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு பற்றிய தொகுப்பு

என்னை கடவுளாக்கி பார்க்காதீர்கள் நீங்கள் தோற்றுப் போவீர்கள் என்னை ஆயுதமாக்கி போராடுங்கள் என்று கூறிய புரட்சியாளர், படிக்கும் காலத்தில் புத்தகம் நிறைந்த பையை சுமந்து வந்த மாணவர்களுக்கு மத்தியில் தனது புத்தகம் பையுடன் ஒரு சாக்கு துணியும் எடுத்து வருவார். காரணம் அவர் பிறந்த சாதி கீழ்ச் சாதியைச் சேர்ந்த ஒருவர் அமரும் இடத்தில் உயர் சாதியில் பிறந்த மாணவன் அமர்ந்தால் தீட்டு ஏற்படும் என்று கருதி தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் துணிப்பை கொண்டு வர வேண்டும் என்ற நடைமுறை இருந்து வந்தது.

பள்ளியில் ஆரம்பித்து கல்லூரியில் தொடங்கிய சாதிக் கொடுமையை தான் பணி செய்யும் இடம் வரை சந்தித்த அந்த மாணவர் ஆனாலும் தொடர்ந்து போராடி இந்திய அரசியலமைப்பு சாசனத்தை உருவாக்கும் குழுவில் தலைவராக பொறுப்பேற்கும் நிலைக்கு உயர்ந்த அந்த மாணவர் தான் டாக்டர் அம்பேத்கர். அம்பேத்கர் பிரித்தானிய இந்தியாவில் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி ராம்ஜி-பீமாபாய் தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் அம்பேத்கர். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பிற மாணவர்கள் அருகில் அமர கூடாது.

அவர்களுடன் பேசவும் விளையாடவும் கூடாது. அவர்களின் குறிப்பேட்டை தொடக்கூடாது, தண்ணீர் அருந்த வேண்டும் என்றாலும் உயர் சாதியைச் சேர்ந்த ஒருவர் ஊற்றும் தண்ணீரை மட்டுமே அருந்த முடியும் போன்ற அடக்குமுறைகளுக்கு காரணம் தான் பிறந்த சாதிதான் என்பதை வெகு விரைவாக அறிந்தார் அம்பேத்கர். சாதிய அடக்குமுறைகளுக்கு மத்தியில் மெட்ரிகுலேஷன் பள்ளிப்படிப்பை முடித்த அம்பேத்கர் கல்லூரியில் இணைந்தார். பள்ளியில் தொடங்கிய அதே சாதி அடக்குமுறை கல்லூரியிலும் தொடங்கியது. கல்லூரிகளில் கேன்டீனில் கூட தேநீர் அருந்த கூடாது என்று அனுமதி மறுக்கப்பட்டது அம்பேத்கருக்கு. தனக்கு எதிரான சாதிய அடக்குமுறை பி.ஏ. இளங்கலை பட்டம் பெறக்கூடிய உத்வேகத்தை அளித்தது அம்பேத்கருக்கு.

படிப்பு முடிந்ததும் சிறிது காலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைகளுக்குத் தலைவராக பதவியில் வேலைக்குச் சேர்ந்தார். பட்டப்படிப்பு முடித்து இருந்தாலும் அங்கும் சாதி அடக்கு முறைக்கு ஆளானார். இதனால் அங்கிருந்து கிளம்ப முடிவெடுத்தார். இவரின் என்னத்தை அறிந்த பரோடா மன்னர் அம்பேத்கர் கொலம்பியாவில் இணைந்து படிக்கும் வாய்ப்பை அமைத்துக் கொடுத்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இணைந்து பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களை கற்றார். அங்கு 1915-ல் பண்டைய இந்தியாவில் வாணிகம் என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டமும் பெற்றார்.

பின்னர் இந்திய தேசிய பங்கு விகிதம் ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு என்ற தலைப்பில் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஓர் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டார். இந்த ஆய்வுக் கட்டுரைக்காக கொலம்பியா பல்கலைக்கழகம் அம்பேத்கருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. இந்த கட்டுரை ஆங்கிலத்தில் இந்தியாவில் மாகாண நிதி வளர்ச்சி என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது. இன்று இந்தியாவில் நிதிநிலை அறிக்கை வெளியிடும் பொழுது ஒவ்வொருவரும் புரட்டிப் பார்க்கும் உயர் நூலாக விளங்குகிறது அம்பேத்கரின் இந்தியாவில் மாகாண நிதி வளர்ச்சி.

1932 ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை காந்தி கடுமையாக எதிர்த்தார். இந்நிகழ்வில் சமூகத்தை இரண்டாக பிரிக்கும் என்ற வாதத்தை முன்வைத்தார். இந்தியா விடுதலை பெற்றவுடன் காங்கிரஸ் அரசால் முதல் சட்ட அமைச்சராகப் பொறுப்பு ஏற்க அழைக்கப்பட்டார். அதன்படி சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக பதவியேற்ற அண்ணல் அம்பேத்கர். அதனைத் தொடர்ந்து இந்திய அரசியல் அமைப்பின் சட்டத்தை உருவாக்கும் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்படி அம்பேத்கரால் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச்சட்டம் நவம்பர் 26 1949 அன்று மக்களவையில் தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் நவம்பர் 26 1949 அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு ஏற்கப்பட்டது. அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர், தலித்துகளுக்காக போராடியவர் என்று மட்டுமே அம்பேத்கர் அறியப்படுவது துரதிஷ்டம். அதையும் தாண்டி திட்டங்களை வகுத்தது நதிநீர் பங்கீடு தொடர்பாக இன்றும் பொருந்தக்கூடிய கருத்துக்களை அன்றே வலியுறுத்தியது, முதல் 8 மணி நேர வேலை உரிமை இந்தியவில் அமலாக்க காரணமாக இருந்தது, அதை தாண்டி பிரம்மாண்ட நீர்வளத் திட்டங்களை வகுத்தது வரை அம்பேத்கரின் பங்கு அளப்பரியது.

கல்வியாளராக, பொருளாதார நிபுணராக, தத்துவ வாதியாக, அரசியல் செயற்பாட்டாளராக,
மின்சாரத்துறை அமைச்சராக, சட்ட அமைச்சராக அவர் ஆற்றிய பணிகள் இந்திய மக்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்விலும் தாக்கம் செலுத்தியது. வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை அவரிடத்தில் கோரிக்கையின் வடிவமே. தாழ்த்தப்பட்ட மக்களின் நல்வாழ்விற்காக சுதந்திர இந்தியாவில் வடிவமைப்பதிலும் தனது வாழ்நாள் முழுவதும் போராடிய அம்பேத்கர் 1955ஆம் ஆண்டு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார். நோயின் தாக்கம் அதிகமாகவே முதலில் தன்னுடைய கண் பார்வையை இழந்தார். 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அவரது வாழ்க்கை முடிவுக்கு வந்தது. தனிநபர் ஒருவரின் பொருளாதார நிலையும் சமூக நிலையும் கல்வியை நிர்ணயிக்கிறது என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்தியவர் அண்ணல் அம்பேத்கர்

Categories

Tech |