சவுதியில் மறு அறிவிப்பு வரும் வரை காலவரையின்றி ஊரடங்கு விதிக்கப்படும் என அந்நாட்டு மன்னர் சல்மான் தெரிவித்துள்ளார்
கடந்த 4 நாட்களில் சவுதி அரேபியாவில் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது என அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 4033 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு அதில் 52 பேர் உயிரிழந்துள்ள நிலையில் வளைகுடா நாடுகளில் சவுதி அரேபியாவில் தான் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை காலவரையின்றி நீட்டிக்க போவதாக சவுதி மன்னர் சல்மான் தெரிவித்துள்ளார். அந்நாட்டில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான சர்வதேச விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டது, உம்மர் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டது, பொது இடங்கள் மூடப்பட்டது என எல்லாம் அப்படியே இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.