கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசின் ணுகுமுறை குறித்து ஏப்ரல் 15 திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு முழு 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. நாளை மறுநாளுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் ஏப்ரல் 15ஆம் தேதி திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலினுக்கும் அறிக்கை போர் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. கொரோனா நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று திமுக வலியுறுத்திய போது அதிமுக அதனை நிராகரித்தது.
இதனையடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் ஏப்ரல் 15 காலை 10 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசின் அணுகுமுறை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இந்த கூட்டம் நடைபெற இருப்பதாகவும் திமுக விளக்கம் அளித்துள்ளது.