துலாம் ராசி அன்பர்களே…. இன்று ஆரோக்கியம் மேம்படும் அனுகூலமான நாளாகவே இருக்கும். தனவரவு அதிகரிக்கும் பெண்களிடம் எதிர்பார்த்த லாபங்களும் ஏற்படும். இன்று மருத்துவர்களால் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும் எடுத்த வேலையையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள் நல்ல பெயரும் எடுப்பீர்கள்.அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.
கவனத்தை சிதறவிடாமல் காரியங்களின் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது கூடுமானவரை அனைவரையும் அனுசரித்துச் சென்றால் அனைத்து விஷயங்களுமே இன்று உங்களுக்கு சிறப்பாக நடக்கும் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும் சரியான உணவை எடுத்துக்கொள்ளுங்கள் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள் மனைவியிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள், அதேபோலவே பிள்ளைகளிடமும் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.
பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை இன்று நீங்கள் வாங்கிக் கொடுப்பீர்கள் குடும்பத்துக்குத் தேவையான பொருட்களையும் வாங்கிக் கொடுப்பீர்கள். சகோதர வகையில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். காதலர்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றமான நாளாக இருக்கும்,காதல் கை கூடும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுபோலவே இன்று இல்லத்தில் சிவபெருமான் வழிபாடு நடத்தினால் காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்கள்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் பச்சை