கும்பம் ராசி அன்பர்களே.… இன்று பண வரவும் மனத் திருப்தியும் ஏற்பட்டு மகிழும் நாளாக இருக்கும். புதிய பதவிகள் வாகனம் வசதி வாய்ப்புக்கள் என எல்லாவற்றிலும் இன்று முன்னேற்றம் ஏற்படும். வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்.
மனத்தெளிவு ஏற்படும் எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமையும் அதிகரிக்கும். ஆனால் ஒரு சின்ன விஷயங்கள் வயிற்றுக் கோளாறு சம்பந்தப்பட்ட சில பிரச்சனைகள் இருக்கும் அவர்கள் மட்டும் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது அதாவது அஜீரணக் கோளாறு போன்றவை ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பணவரவு சிறப்பாக இருக்கும் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.
ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும் தெய்வ பக்தி அதிகரிக்கும் மனைவி மூலம் சில முக்கிய காரியங்கள் நிறைவேறும். பெண்களால் இன்று உங்களுக்கு நல்ல லாபமும் மனதில் நிம்மதியும் ஏற்படும். அதேபோல உறவினர் வகையிலும் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களும் உங்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள் அக்கம்பக்கத்தினரும் அன்பாகவே நடந்து கொள்வார்கள் என்று உங்களுடைய உடலில் வசீகரத் தன்மை கூடி காதல் வயப்பட கூடிய சூழலும் இருக்கீங்க பார்த்துக் கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது ஊதா நிறம் எப்பொழுதும் உங்களுக்கு ஒரு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் அதுபோலவே இல்லத்தில் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள்.
அதிர்ஷ்ட திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்:2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் :ஊதா மற்றும் வெள்ளை