Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசி…. பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்பட வேண்டிய நாள்…..!

மீன ராசி அன்பர்களே…. இன்று நீங்கள் வாக்குவாதங்களை மட்டும் தவிர்த்துவிட்டால் இன்றைய நாளை உங்களுக்கு பொன்னான நாளாக அமைத்துக்கொள்ளலாம். இல்லத்தில் அமைதி நிலவும், காரியங்கள் கைகூட கடின உழைப்பு தேவைப்படும்.
இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள் இதனால் தான் நீங்கள் கோபப்படுவீர்கள். கணவர் மனைவிக்கு இடையே ஒற்றுமை இருக்கும் கவலை வேண்டாம்.பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும்.

பெண்கள் அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை ஆலோசித்து பின்னர் ஈடுபடுவது ரொம்ப நல்லது.இன்று நீங்கள் எந்த ஒரு முயற்சியும் ஈடுபடும்பொழுது கவனத்துடனும் ஆலோசனையும் ஈடுபடுவது ரொம்ப நல்லது. பெரியோர்களிடம் முக்கியமாக ஆலோசனை கேட்டு செய்யுங்கள்.

வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள் மித வேகத்தில் பின்பற்றுங்கள். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இன்றி சிறப்பாகவே இருக்கு.அதேபோல இன்று யாரிடமும் கடன் வாங்க வேண்டாம் பணம் தேவை இருந்து கொண்டே தான் இருக்கும் ஓரளவு சமாளிப்பது நல்லது கூடுமானவரை செலவை மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் தேவையில்லாத பொருட்களில் எந்தவித உதவிகளும் செய்ய வேண்டாம் பொறுமை காப்பது ரொம்ப நல்லது புதிய முயற்சிகளை செய்யாமல் இருந்தாலே சிறப்பாகவே இருக்கும் இருப்பதைக் கொண்டு கூடுமானவரை முன்னேறுவது தான் ரொம்ப நல்லது. பொறுமை காப்போம் பின்னர் எதையும் நாம் செயல்படுத்துவோம்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அது போலவே இன்று இல்லத்தில் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் சிவப்பு

Categories

Tech |