மிதுன ராசிக்கான சித்திரை மாத பலன்: மிருகசீரிஷம், திருவாதிரை, பூசம் நட்சத்திரத்தில் பிறந்த தங்களுக்கு இந்த மாத ராசிபலன்களின் அடிப்படையில் மங்களகரமான சார்வரி வருடம் சித்திரை மாதம் இந்த வருடத்தின் பெயர். சித்திரை மாதம் என்னென்ன பலன்கள், சுப பலன்கள், வணங்க வேண்டிய தெய்வங்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட திசைகள், சந்திராஷ்டம தினங்கள் இதெல்லாம் பற்றி நாம் மாத ராசிபலன் என்ற அடிப்படையில் பார்க்கலாம். உங்களுடைய ராசிக்கு எப்பொழுதுமே ஒரு தெய்வம் இருக்கும். உங்களை காப்பாற்றக்கூடிய ஒரு தெய்வம் அதுதான். அதைவிட்டு நாம் மற்ற தெய்வங்கள் எல்லாம் கும்பிடுவோம். காலம் முழுவதும் நம்ம ராசிக்கு அதிபதியான தெய்வங்கள் புத பகவான், மகாவிஷ்ணு இவர்கள்தான். இந்த மாதம் முழுவதும் நல்லா இருக்க வேண்டும் என்றால் 2 பேரையும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்களுடைய ராசிநாதன் உங்களுக்கு சாதகமாக இருந்து ஜாதகத்தில் நல்ல பலன்களை கொடுப்பார்.
ராசியிலேயே ராகு சஞ்சரிப்பதால்; உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் தேவை. உடல்நல கோளாறுகள் சிலபேருக்கு ஏற்படும். எதிரிகள் அதிகமாக உருவாகக்கூடிய அமைப்புகள் ஏற்படும். பெண்களின் மூலமாக பிரச்சினைகள் ஏற்படும். ஆண்களாக இருந்தால் சில பேருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் வயிறு வயிற்றுப்போக்கு உஷ்ண சம்பந்தமான பிரச்சனைகள் அம்மை நோய் இந்த மாதிரியான பிரச்சினைகள் ஏற்படும். வெளிநாட்டு தொடர்புகள் சாதகமாகவே இருக்கும். வெளிநாடு போகக்கூடிய அமைப்புகள் இருக்கும். வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய பொருட்கள் வந்து சேரும். வெளிநாட்டு தொடர்பு சீராகும்.
ராசிக்கு 12ம் இடம் என்று சொல்லக்கூடிய இடத்தில் சுக்கிர பகவான்; அதனால் தன விரையம் கொஞ்சம் ஏற்படும். சுப விரயமாக கூட ஏற்படும். புதிதாக நகை வாங்குவது இடம் வாங்கிப் போடுவது அல்லது சின்ன கார் ஒன்று வைத்திருந்தால் பெரிய கார் வாங்க கூடியது இந்த மாதிரியான நாட்டத்தை ஏற்படுத்தும். அதற்குண்டான சூழ்நிலைகளும் உருவாகும். 12ல் சுக்கிரன் விரய ஸ்தானத்தில் ஏற்படும். சுப விரயமாக செய்துகொள்வது நல்லது. தேவையில்லாத கடன் கொடுப்பார்கள். அதை திருப்பித் தர மாட்டார்கள். அதனால் மருத்துவச் செலவு ஏற்படும். திருடு போகிறது இதுபோல நடக்கும். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்.
பதினோராம் இடத்தில் சூரியன் லாப ஸ்தானமாக இருப்பதால்; அரசுத்துறை, அரசு துறை சார்ந்த தொழில், அரசியல்வாதிகள், அரசு பணியாளர்கள், சின்ன பதவிகளிலிருந்து, பெரிய பதவிகள் வரை இவர்கள் எல்லோருக்குமே இந்த மாதத்தில் ஊதிய உயர்வு சம்பள உயர்வு பணிஉயர்வு மேலதிகாரிகளின் பாராட்டு புதிய பொறுப்புகள் இவையெல்லாம் ஏற்படக்கூடிய அமைப்பு உண்டாகும். இந்த மிதுன ராசி நேயர்களுக்கு சித்திரை மாதம் கிடைக்கும் 10-ஆம் இடம் தொழில் ஸ்தானம், ஜீவன ஸ்தானம், கர்ம ஸ்தானம் என்ற இடத்தில் குருவின் வீட்டில் புதன் சஞ்சரிக்கிறார். அதுவும் நன்மையைச் செய்யும். சுயதொழில் செய்பவர்கள் சின்ன சின்ன குரு சிறுதொழில் செய்பவர்கள், சின்ன பாக்கெட் போட்டு விற்பவர்களுக்கு கூட பெரிய அளவில் சேல்ஸ் பண்ணுவார்கள்.
அந்த நிலையிலிருந்து பெரிய தொழில் சொந்தமாக சம்பாதிப்பவர்கள் யோகங்கள் அதிர்ஷ்டங்களை இந்த மாதத்தில் ஏற்படும். பத்தாம் இடத்தில் புதன் இருக்கிறார் தொழிலுக்கு அதிபதி ராசிநாதனாக இருப்பதனால் மிகச்சிறப்பாக ஆபத்தை ஏற்படுத்தி, தொழிலில் விரக்தி ஏற்படுத்தி பல இடங்களில் பிழைகள் உண்டாகக்கூடிய அமைப்புகள் எல்லாம் இந்த மாதத்தில் ஏற்படும். உங்கள் ராசிநாதன் பத்தாமிடத்தில் இருக்கும் பொழுது ஒரு கடை வைத்திருப்பவர்கள் மூன்று கடை வைக்கும் அளவிற்கு நன்மைகள் ஏற்படும். பத்தாம் இடத்தில் செவ்வாய் குரு சேர்க்கை அஷ்டமத்தில் இருக்கிறது. அதனால் திருமணத்தை தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை, கணவன்-மனைவிக்கு இடையே சிறுசிறு பிரச்சினைகள் வந்து விளங்கும்.
செவ்வாய் எட்டில் இருப்பதால் கொஞ்சம் பூமி விரயங்கள், உடல்நல கோளாறு, விபத்துகள் அதெல்லாம் நடக்க கூடிய வாய்ப்புகள் ஏற்படும். குரு கூட இருப்பார், அஷ்டம குரு நன்மை செய்யாது. இடையூறு ஏற்படுத்தும் ஒரு மூன்று மாதத்திற்கு குருவால் நன்மை இல்லை. குருவின் பார்வை இல்லை. அதனால் கொஞ்சம் எச்சரிக்கையாக கவனமாக இருக்க வேண்டிய நேரம். ஏழாமிடத்தில் சனி கேது மிக சிறப்பான செயல்களை செய்கின்றனர். குறிப்பாக வண்டி வாகனங்கள் வாங்க கூடிய அமைப்பு, பழைய கோர்ட் கேஸ், வம்பு வழக்கு பிரச்சினைகள் எல்லாம் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். யாருடனாவது சண்டை போட்டிருந்தால் அவர்கள் தேடி வந்து பேசுவார்கள். நண்பர்களாக பேசுவார்கள்.
பொதுவாக எடுத்துக் கொண்டால் சித்திரை மாதத்தில் 80% நன்மை பெறுவீர்கள், அதில் கல்வி பயிலக் கூடிய மாணவச் செல்வங்களுக்கு 85 சதவீத நன்மைகள், கலைத்துறை அரசியல்வாதிகள் பெண்களுக்கு 50 சதவீத நன்மைகள், சுய தொழில் உத்தியோகம், வியாபாரம், விவசாயம் செய்பவர்களுக்கு 90 சதவீத நன்மைகள், மேற்கொள்ள கூடிய நல்ல மாதமாகவே இருக்கிறது. முக்கியமான பணிகளை தவிர்க்க வேண்டிய சந்திராஷ்டமம் என்று பார்த்தால் இரண்டு சந்திராஷ்டமம் உங்களுக்கு வருகிறது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். சித்திரை மாதம் இரண்டாம் தேதி புதன்கிழமை காலை 7 மணி முதல் சித்திரை மாதம் நான்காம் தேதி மாலை வெள்ளிக்கிழமை மாலை 3 மணி 43 நிமிடம் வரை இருக்கிறது. சித்திரை மாதம் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பகல் இரண்டு 40 முதல் வைகாசி ஒன்று வியாழக்கிழமை இரவு 11 மணி ஐந்து நிமிடம் வரை இருக்கிறது. அந்த நிமிடங்களில் அந்த காலகட்டத்தில் தாங்கள் இறைவழிபாடு செய்து தங்களுடைய அந்த சந்திராஷ்டமம் என்று சொல்லக்கூடிய மனக்கஷ்டங்கள் மன குழப்பத்தை விலக்கிக் கொள்ளலாம்.
அதிஷ்டமான வண்ணம்: பச்சை, மஞ்சள்
அனுகூலமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 7
அனுகூலமான தெய்வம்: நரசிம்மர்
நரசிம்ம பெருமாளை வணங்கி இந்த மாதத்தை ஒரு இனிமையான மாதமாக மாற்றிக்கொள்ளுங்கள்.