Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினிக்கு டூப் போட்டது இவர்தானாம் – பத்து வருடங்கள் கழித்து வெளிவந்த ரகசியம்….!!

ரஜினியின் எந்திரன் படத்தில் மனோஜ் ரஜினிக்கு தான் டூப் போட்டதாக தெரிவித்து புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்

ஷங்கர் இயக்கி ரஜினி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் எந்திரன். பல கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த ரோபோட்டிக் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடித்திருந்தார். ரஜினி இப்படத்தில் வசீகரன் என்ற விஞ்ஞானியாகவும், சிட்டி என்ற ரோபோவாகவும் இருவேடங்களில் நடித்திருப்பார்.

இத்திரைப்படத்தில் சிட்டி மற்றும் வசீகரன் என இரண்டு கதாபாத்திரங்களும் ஒருசேர வரும் காட்சிகளில் ரஜினிக்கு பாடி டபுள் என்கிற வகையிலான டூப் போட்டு நடிகரும் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் நடித்திருக்கிறார். படம் வெளியாகி 10 ஆண்டுகள் கழித்து இதுகுறித்த தகவலை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் மனோஜ்.  அதோடு எந்திரன் திரைப்படத்தில் சங்கருக்கு உதவி இயக்குனராக மனோஜ் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |