Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் 2000 பேருக்கு கொரோனா – உயரும் பாதிப்பால் மக்கள் அதிர்ச்சி ..!!

மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2000த்தை தாண்டியுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் கொடூரத்தை நிகழ்த்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய வைரசால் உலக நாடுகளே மரண பயத்தில் இருந்து வருகின்றது. மக்கள் கொத்துக்கொத்தாக இறந்து வருவதால் உலக நாடுகள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தியாவும் கொரோனா வைரஸ் பிடியில் சிக்கியுள்ளது. தினம்தோறும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவைப் பொருத்தவரை மகராஷ்டிரா மாநிலம் கொரோனாவுக்கு அதிகம் பாதித்துள்ளது. அங்கே மட்டும் 1985 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 217 பேர் குணமடைந்து,  149 பேர் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் புதிதாக 82 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2064ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |