Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கான சித்திரை மாத பலன்.. 75% நன்மைகள் நடைபெறும்… சிக்கல்கள் கொஞ்சம் ஏற்படும்..!!

கடகம் ராசிக்கான சித்திரை மாத பலன்கள்: புனர்பூசம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்த தங்களுக்கு பல தரமான சார்வரி வருடம் என்ற தமிழ் வருடத்திற்கு பெயர். சார்வரி வருடம் சித்திரை மாதம்  கடக ராசிக்கு எப்படி இருக்கும். சுபபலன்கள், சந்திராஷ்டம தினங்கள், வணங்க வேண்டிய தெய்வங்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட திசைகள், இதை பற்றி பார்க்கலாம். ராசி உங்கள் ராசிக்கு அதிபதியாக விளங்கக்கூடிய தெய்வம் நீங்க கும்பிட்டாலும் கும்பிடவில்லை  என்றாலும் உங்கள் ராசிக்கு விளங்கக்கூடிய தெய்வம் சந்திர பகவானும் பார்வதிதேவியும்.

இவர்கள் இரண்டு பேரையும் எப்பொழுதும் நீங்கள் வழிபட்டு கொண்டீர்கள் என்றால் உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். காலம் முழுவதும் எந்த தெய்வத்தைக் கும்பிட்டாலும் எந்த தெய்வம் பிடித்தாலும், எத்தனை வீடு இருந்தாலும் நம்ம வீடு தான் நமக்கு முக்கியம் என்பது சாஸ்திரம். அதுபோல உங்கள் தெய்வங்கள் அதிபதியான தெய்வம் தான் உங்களை காக்கும் உங்களை கைவிட மாட்டார்கள் அவர்களை துதிசெய்து சோஸ்திரம் செய்து இந்த மாதம் வழிபடுங்கள்.

ராசிக்கு 12ம் இடத்தில் ராகு சஞ்சரிக்கின்றார் பொதுவாக 12-ஆம் இடம் என்று எடுத்தாலே சுகவீனம் என்று சொல்லுவார்கள். விரைய ஸ்தானம் என்று கூறுவார்கள். அப்பொழுது சுகம் இழக்க கூடியவை, விரயங்கள், சுகம் , சந்தோஷத்தை இழக்க கூடியது. சாப்பாடு, பசி, தூக்கம் இதை இழுக்கக் கூடியது. பொருளாதாரரீதியாக இழக்கக்கூடியது என்று அந்த இடத்திற்கு பெயர். அப்பொழுது அங்கு ராகு இருப்பதால் என்ன நடக்கும் என்றால் ராகு உங்களுக்கு நன்மை செய்யக்கூடிய கிரகம். அதனால் பெரிய அளவில் இழப்பு இருக்காது. அதனால் நன்மைதான் செய்வார். அதனால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

அதுவும் புதனுடைய வீட்டில் இருப்பதனால் கல்வித் துறையில் சிறந்து விளங்கலாம். கல்வி முன்னேற்றங்கள், வெளிநாட்டு யோகங்கள், சுய தொழில் லாபம், உடலில் இருந்த வந்த உபாதைகள் விலகும், உடல் நோய்கள் தணியும், தன விரயங்கள் குறையும், மனதிற்கு இனிய சம்பவங்கள் நடக்கும், ஆனால் சரியான நேரத்திற்கு ஆகாரம் தூக்கம் மட்டும் இருக்காது. அதை மட்டும் நீங்கள் சரி செய்து கொள்ளுங்கள்.

11-ஆம் இடம் லாப ஸ்தானம் என்று சொல்லும்பொழுது சுக்கிரன் சஞ்சரிப்பதால்;  எதிர்பாராத தனவரவு யோகம் அதிர்ஷ்டம் இந்த மாதிரி எல்லாம் இந்த மாதத்தில் கிடைக்கும். பழைய கடன்கள் எல்லாம் நிவர்த்தி ஆகும், அதே நேரம் யாராவது தொந்தரவு கொடுப்பார்கள். நீங்கள் நாலு பேருக்கு கடன் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பொருளாதார முன்னேற்றம் சுய தொழில் லாபம் அதிர்ஷ்டம், யோகம், கீர்த்தி, புகழ் இவை எல்லாம் உண்டாகும். வெளியூர் சுற்றுலா, வெளிநாடுகள் போகக்கூடிய அமைப்புகள் ஆன்மிக சுற்றுலா இவையெல்லாம் நடக்கக்கூடிய அமைப்புகள் கணவன்-மனைவிக்குள் ஒரு அன்னியோன்யம் இவையெல்லாம் இந்த மாதத்தில் கண்டிப்பாக ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

பத்தாமிடம் என்று சொல்லக்கூடிய இடத்தில் சூரியன் சஞ்சரிக்கின்றார்; தொழில் ஸ்தானத்தில் அதனால் அரசு உத்தியோகத்தில் இருக்கக் கூடியவர்களுக்கு மிகச் செழிப்பான நேரம் என்று சொல்லலாம். கடகராசி உடையவரின் தகப்பனாருக்கு மிகச்சிறப்பான புதிய பொறுப்புகள், பணி உயர்வு, சம்பள உயர்வு, பாராட்டுக்கள், புதிய ஒரு பொறுப்புகள் இந்த மாதிரி தொழில் முன்னேற்றங்கள் இவையெல்லாம் கிடைக்கும். அதுவே கடகராசியில் இருக்கக்கூடிய அரசுத் துறையை சார்ந்த தொழில் செய்பவர்கள் அரசு ஊழியர்கள் அரசியல்வாதிகள் இவர்களுக்கெல்லாம் பணியில் ஒரு சுமை குறையும். பதவி உயர்வு ஏற்படும் சம்பள உயர்வு ஏற்படும். கேட்ட இடத்திற்கு இடமாற்றங்கள் கிடைக்கும். உஷ்ண சம்பந்தமான நோய்கள் சிலருக்கு ஏற்படும். காய்ச்சல் இந்த மாதிரியான உடம்பில் உள்ள கட்டிகள் போன்ற தொல்லைகள் ஏற்பட கூடிய அமைப்பு ஏற்படும்.

ஒன்பதாமிடத்தில் லாப ஸ்தானத்தில் குருவின்; வீட்டில் புதன் அதனால் கல்வியில் சிறந்து விளங்கலாம். கல்வித் துறையில் படிக்கக்கூடிய மாணவர்கள் மட்டுமல்லாது சம்பந்தமாக தோல் வேலை பார்ப்பவர்களுக்கும், பள்ளிக்கல்வித் துறை உயர்கல்வித் துறையில் வேலை செய்பவர்களுக்கும் படித்து கொண்டிருப்பவர்களுக்கும் அதில் இருக்கக்கூடிய அதிகாரிகளுக்கும் இவர்கள் எல்லோருக்குமே மிகச் சிறப்பான யோகங்கள், பணி உயர்வு, சம்பள உயர்வு என்ன எதிர்பார்க்கிறார்களோ அது நடக்கும். உங்கள் மேல் எவருக்கும் கெட்ட எண்ணங்கள் வந்தால் அது நீங்கிவிடும். உங்களுடைய திறமை வெளிப்படும். உங்களது திறமையை காட்ட கூடிய நல்ல நேரம் என்று சொல்லலாம்.

ஏழாமிடத்தில் செவ்வாய் குரு சேர்க்கை;  திருமண பேச்சுகள் கைகூடும். காதல் இதெல்லாம் பண்ணி கொண்டு இருப்பவர்களுக்கு கண்டிப்பாக திருமணம் நடக்கக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். யோகம் உள்ளவர்களுக்கு இரண்டு தாரம் என்று இருக்கக்கூடியவர்களுக்கு அந்த நேரம் வந்தாச்சு என்று சொல்லலாம். பூமி மனை வாங்க கூடிய நன்மை ஏற்படும். விவசாயிகளுக்கு நன்மை, ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு நன்மை. ஆறாம் இடத்தில் சனி, கேது; அவ்வளவு நன்மை செய்யாது காலில் அடிபட கூடிய வாய்ப்புகள் இருக்கும். முட்டிகளில் அடிபடும் ஆனால் எச்சரிக்கையாக இருங்கள். பத்தாம் இடத்தில் ராகுவும் சஞ்சரித்துவிட்டார்; அதனால் கேதுவும் சனியும் சேர்க்கை கண்டிப்பாகப் இனவாதம் இருக்கும். கால் நொண்டுபடியாக வைத்துவிடுவார் ஜாக்கிரதையாக இருங்கள்.

எதிரி, கடன், வியாதி போன்றவை வரும். சமாளித்துக் கொள்ளலாம். இந்த ராசிநாதன் வழிபட்டு வந்தால். அவை எல்லாம் பிரச்சினைகள் வராது, பொதுவாக கடக ராசி என்றால் 75% நன்மைகளை தரக்கூடிய நல்ல ராசியாக விளங்குகிறது. கல்வி பயிலக் கூடிய மாணவர்களுக்கு 90 சதவீத நன்மைகள், கலைத்துறை, அரசியல்வாதிகளுக்கு, பெண்கள் அவர்களுக்கு 70 சதவீத நன்மைகள், சுய தொழில் உத்தியோகம் வியாபாரம் விவசாயம் செய்பவர்களுக்கு 90 சதவீத நன்மைகளும் ஏற்படக்கூடிய ஒரு நல்ல மாதமாக இந்த மாதம் விளங்குகிறது. இந்த மாதம் உண்டான சந்திராஷ்டமம் முக்கியமான பணிகளை தவிர்க்க வேண்டிய சந்திராஷ்டம தினங்கள் பார்த்தால் சித்திரை மாதம் நான்காம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 3 மணி 43 நிமிடம் முதல் சித்திரை மாதம் ஆறாம் நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு 2 மணி 30 நிமிடம் வரை இந்த சந்திராஷ்டமம் சம்பதிக்கிறது. அந்த நேரங்களில் முக்கியமான பணிகளை தவிர்த்து இறை வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

 அதிர்ஷ்டமான வண்ணம்: வெள்ளை, சிகப்பு

அனுகூலமான திசை: மேற்கு

அதிர்ஷ்டமான எண்: 5

வணங்க வேண்டிய தெய்வம்: துர்காதேவி

துர்க்கை அம்மனை வழிபட்டு இந்த மாதத்தை இனிமையான மாதமாக மாற்றுவதற்கு மேற்கொள்ளுங்கள்

Categories

Tech |