Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் முடங்கும் அமெரிக்கா: ஆபத்தில் இந்திய ஐடி நிறுவனங்கள்!

அமெரிக்கா முழுவதும் ஊடரங்கு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்திய ஐடித்துறை பெரிதும் பாதிக்கக்கூடும் நெருக்கடியில் உள்ளது.

அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களும் பேரிடர் பாதித்த மாகாணங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாகாணங்களிலும் கடுமையான ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இந்த ஊடரங்கு உத்தரவால் தகவல் தொழில்நுட்பத்துறையில் பல்லாயிரம் பேர் வெளியிழக்கும் அப்பாயம் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்திலும், ராணுவத்திலும் வல்லராக கருத்தப்படக்கூடிய அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 22,115 பேர் பலியாகியுள்ளனர்.

அங்கு 5 லட்சத்து 60 ஆயிரத்து 433 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களையும் பேரிடர் பாதித்த மாகாணங்களாக அதிபர் டெனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். குறிப்பாக வர்த்தக தலைநகரான நியூயார்க்கில் அதிகமான வெளிநாட்டவர்கள் வந்து செல்வதால், பெரும் சிரமத்திற்கு மத்தியில் ஊடரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பால் பொருளாதார ரீதியாக உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்படும்.

அதுபோல இந்தியாவில் உள்ள ஐடி துறைகளும் கடுமையான பாதிப்பை சந்திக்க நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகில் 55% தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்காவில் உள்ளன. மென்பொருள் நிறுவனங்கள் 20 முதல் 30% வரை கட்டணச் சலுகை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மென்பொருள் நிறுவனங்களின் வருவாய் 3 முதல் 7% வரை குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் சர்வதேச அளவில் மென்பொருள் நிறுவனங்களைச் சார்ந்த பிற தொழில்களும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல அமெரிக்காவில் நடுத்தர அளவிலான மென்பொருள் நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்ய வாய்ப்புகளும் இருக்கிறது. இந்தியாவில், கடந்த 25ம் தேதியில் இருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து ஏராளமான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டது.

இதன் காரணமாக அன்றாடம் வருவாய் ஈடுபவர்கள் முதற்கொண்டு, மாத சம்பளம் பெறுபவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவர்களை தவிர்த்து ஐடி ஊழியர்கள் மட்டும் தான் வீட்டிலிருந்தபடியே வேலை பார்த்து வருகின்றனர். தற்போது, அந்த துறைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா முழுவதும் முடங்கி இருப்பதால் அமெரிக்க ஐடி வல்லுநர்கள் மட்டும் அல்லாது இந்தியாவில் உள்ள ஐடி ஊழியர்களும் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |