தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் நாளையுடன் நிறைவடைய இருக்கும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கபடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை காலை 10 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேச இருக்கின்றாரார். இதில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு, ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்ட்டுள்ளது. பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்த முதல்வர், ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் தமிழகத்தில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை தளர்த்தினால் தொற்று அதிகரிக்க கூடும் என்பதை கருத்தில் கொண்டு நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.