மகர ராசிக்கான சித்திரை மாத பலன்கள்..! உத்திராடம், திருவோணம், அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாத ராசிபலன்கள் என்ற அடிப்படையில் 2020ஆம் ஆண்டு மங்களகரமான சார்வரி வருடம் சித்திரை மாதம் மகர ராசி நேயர்களுக்கு நடக்கக்கூடிய சுப பலன்கள், அசுப பலன்கள், வணங்க வேண்டிய தெய்வங்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட திசைகள், சந்திராஷ்டம தினங்களில் பற்றி பார்ப்பதற்கு முன் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் அப்படிப் பார்க்கும் பொழுது இப்பொழுதும் காப்பாற்றக் கூடியவர்கள் சனிபகவான் அதிபதி அதனால் சனி பகவானை அதிபதியாக இருக்கக் கூடியவர் எமதர்மராஜா இவர்களையும் நாம் பிரார்த்தனை செய்து நிகழ்ச்சிகள் போனால் சிறப்பாக இருக்கும்.
வாழ்க்கை முழுவதும் சனி பகவானையும், எமதர்மராஜன் பிரார்த்தனை செய்து கொண்டு ஒவ்வொரு காரியத்தையும் செய்தோம் என்றால் அங்கு வாழ்க்கை முழுவதும் இனிமையாக ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலகி சிறப்பாக இருக்கும். ராசியிலேயே செவ்வாய் குரு சேர்க்கை மிக சிறப்பான யோகம், ஜென்ம குரு ராமர் வனத்திலே என்று சொல்லுவார்கள். அப்பொழுது அந்த மூன்று மாதத்திற்கு அதிசாரத்தில் குரு வந்து செவ்வாயுடன் சேர்க்கை இது சிறப்பான யோகம். குரு நன்மைதான் செய்யும். கெடுதல் செய்யாது. தொட்டது துலங்கும் செய்தொழில் லாபம் உயர்பதவிகள் கௌரவம், அந்தஸ்து, தொழிலில் முன்னேற்றம், புதிய தொழில் தொடங்குதல், பழைய தொழிலில் இருந்து வந்த பிரச்சினைகளை விளக்குதல் கடனாக வாங்கி வைத்திருக்கும்.
தொழில் நின்னு போச்சு என்றால் அதை சரிசெய்வது கல்வி படிக்கக்கூடிய மாணவர்களுக்கு உயர்கல்வி சிறப்பான கல்வியை கல்வித்துறையில் மேம்பாடு இவையெல்லாம் நடக்கும். உடல்நலத்தில் இருந்து வந்த நோய்கள் எல்லாம் விலகும். அந்தப் பெயரில் இருந்த தவறான எண்ணங்கள் விலகி உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கக் கூடிய நிலை ஏற்படும். சில பேர் பூமி வாங்கலாம், வீடு வாங்கலாம், வீடு கட்டலாம் இந்த மாதிரியான நினைப்புகள் ஏற்படும். பலவிதமான நன்மைகள் செய்யக்கூடிய அமைப்பு என்று பார்த்தால் ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் ராசிநாதன் கேதுவோடு சேர்ந்து இருப்பதால் அதுவும் நன்மையை செய்யும். பழைய கடன்கள் எல்லாம் விரையம் ஆகும் சுப விரயமாக டெபாசிட்கள் வாகனங்கள் புதுசு வாங்குவது பழைய பிரச்சனைகள் வம்புகள் கோர்ட்டு கேஸ் ஏதாவது இருந்தால் அந்த மாதிரி அனைத்தும் நிவர்த்தி ஆகும்.
நீதித்துறையுலும் நீதி கிடைக்கும். நியாயம் என்று சொல்லக்கூடிய நீதிமன்றத்தில் வேலை செய்பவர்களுக்கும் நன்மை பயக்கக் கூடிய ஒரு நல்ல காலகட்டமாக இருக்கும். நீதிபதிகள் எல்லோரிடமும் நீதிபதிகளாக இருக்கட்டும். வக்கீல்களாக இருக்கட்டும் அந்த துறையில் இருக்கக்கூடிய அனைவருக்கும் நன்மைகள் நடக்கும். நமக்கும் நீதித்துறையில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் அதிலுள்ள தாக்கங்கள் விலகி நன்மைகள் நடக்க கூடிய நேரம் என்பதை இந்த நேரமாக எடுத்துக்கொள்ளலாம். ராசிக்கு மூன்றாம் இடம் என்று சொல்லக்கூடிய குரு உடைய வீட்டில் புதன் சஞ்சரிப்பதால் மிகச் சிறப்பான யோகம் தனியார் தொழில் செய்பவர்கள் சுய தொழில் செய்பவர்கள் அவர்களுக்கு லாபம் ஏற்படும். அதாவது அரசு தொழில் இல்லாமல் தனியார் கம்பெனியில் வேலை செய்பவர்களுக்கு நிறைய நன்மை கிடைக்கும்.
கல்வித்துறையில் மேம்பாடு உத்தியோக உயர்வு, பதவி உயர்வு, சம்பள உயர்வு இடமாற்றங்கள் இவையெல்லாம் ஏற்படும். பலவிதமான நன்மைகள் உண்டாக கூடிய நல்ல நேரம் என்று சொல்லலாம். நான்காம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும் பொழுது அர்த்தாஷ்டம என்னும் இடத்தில் சூரியன் இருப்பதால் அரசு துறை அரசு பதவி அரசியல்வாதிகள் எல்லாம் கொஞ்சம் சிரமமான நேரம் எடுத்துக் கொள்ளலாம். கடுமையாக உழைக்க வேண்டும் அப்பொழுதுதான் மேலதிகாரிகளிடம் பாராட்டுகள் பெறமுடியும். தகப்பனாரிடம் சிறுசிறு பிரச்சினைகள் வம்பு வழக்குகள் போன்றவை வந்துசேரும். ஐந்தாம் இடத்தில் சுக்கிரன் குரு புதன் சுக்கிரன் வலுப் பெற்று இருப்பதனால் பூர்வீக சொத்துக்களால் லாபம் எதிர்பாராத தனவரவு கிடைக்கும்.
எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உண்டாகும். தடைப்பட்டுவந்த காரியங்கள் எல்லாம் சாதகமாகவே முடியும். வெளியூர் பிரயாணங்கள் நன்மையைச் செய்யும் பழைய கடன்கள் நிவர்த்தி ஒரு பொருளில் முதலீடு செய்வது எந்த மாதிரியான சூழ்நிலை ஏற்படும். ஆறாம் இடத்தில் சந்திரன் சஞ்சரிப்பதால் உடல் நலத்தில் உடல்நிலையில் கவனம் தேவை யோகம். இந்த இடத்தில் ராகு இருப்பதால் எதிரி கடன் வியாதி போன்றவை உண்டாக கூடிய அமைப்பு ஏற்படும். அதில் முன்கோபத்தை குறைத்துக்கொள்ளுங்கள். முன்கோபம் அதிகமாக இருந்தால் எல்லோரையும் எதிரிகள் கொள்வீர்கள் என்றால் பணம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது கொள்ளக் கூடிய நேரம் ஆனால் அனைவரிடமும் அமைதியாகவும் பொறுமையாகவும் இருங்கள். அதாவது இந்த காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுக் கொள்ளுங்கள். இல்லை என்றால் நமக்கு அவங்களுக்கு ஆபத்தாக முடிந்துவிடும்.
பொறுமையை கடைபிடிக்க வேண்டும். எதிரிகளை குறைக்கலாம், கடன் வாங்குவதை தவிர்க்க கூடிய நேரம், உடல்நிலையில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். கண்டதே சாப்பிடக்கூடாது அதை மென்று சாப்பிட்டால் அது உங்களுக்கு பிரச்சனையாகிவிடும். நோய் வரக்கூடிய நேரம் என்று சொல்ல வேண்டும். மகர ராசி என்றால் இந்த மாத ராசிபலன்கள் 100க்கு 85% நன்மைகளை பெற பெறக்கூடிய நன்மைகளும், அதில் கல்வி பயிலக் கூடிய மாணவர்களுக்கு 80 சதவீத நன்மைகள், கலைத்துறை அரசியல்வாதிகள் பெண்கள் இவர்களுக்கு 90% நன்மைகளும், சுயதொழில் உத்தியோகம் வியாபாரம் விவசாயம் செய்பவர்களுக்கு 90% நன்மைகளும் ஏற்படக்கூடிய ஒரு நல்ல மாதமாக இந்த மாதம் விளங்குகிறது.
நீங்கள் இந்த மாதத்தில் முக்கியமான பணிகளை தவிர்க்கவேண்டிய சந்திராஷ்டமம் தினம் என்று பார்த்தால் சித்திரை மாதம் 18ம் நாள் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி 40 நிமிடம் முதல் சித்திரை மாதம் இருபதாம் நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி 48 நிமிடம் வரை இன்று சந்திராஷ்டமம் சம்பவிக்கின்றது எனவே அந்த நேரத்தில் முக்கியமான பணிகளை தவிர்த்து இறை வழிபாடு மேற்கொள்ள வேண்டிய ஒரு நல்ல நேரமாக இருக்கும்.
அதிர்ஷ்டமான வண்ணம்: மஞ்சள்
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 9
வணங்கவேண்டிய தெய்வம்: சிவபெருமான், எமதர்மராஜா
சிவபெருமானையும் எமதர்மராஜாவின் சனிபகவானையும் இந்த மாதம் முழுவதும் வணங்கி வந்தால் உங்களுக்கு அனைத்து காரியங்களும் சாதகமாகவே நடைபெறும்.