தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,173ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக நாளை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் பேச இருக்கிறார். இதனிடையே பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அறிவித்துள்ளது. இதே போல தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து வழக்கம் போல மாலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் 1,173 எண்ணிக்கை ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்த 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த சுகாதாரத்துறை செயலாளர் 58பேர் குணமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.