கொரோனா தொற்றைத கட்டுக்குள் கொண்டு வந்து ஊரடங்கை தளர்த்திய நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா பரவ தொடங்கியுள்ளது.
சீனாவில் வூஹான் நகரில் தொடங்கிய வைரஸ் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கி 180 நாடுகளுக்குள் தடம் பதித்து சுமார் 18 லட்சம் பெருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. ஆரம்பக்கட்டத்தில் சீனாவில் அதி வேகமாகப் பரவிய இந்த வைரஸ் பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் சீனாவில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு முழுவதுமாக தளர்த்தப்பட்டது.
ஆனால் தற்போது வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மூலம் மீண்டும் சீனாவில் தொற்று பரவ தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் 108 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். முந்தையநாள் 99 பேர் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மார்ச் 5 ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தது அதிலிருந்து ஆறு வாரங்கள் கழித்து நேற்று அதிக அளவு மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சீனாவில் 82160 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு 3341 பேர் மரணமடைந்துள்ளனர். சீன எல்லையின் அருகே இருக்கும் ரஸ்சியாவில் இருந்து தொற்று பரவுவதால் எல்லைகளை தீவிரமாக கண்காணிக்க முடிவினை எடுத்துள்ளது சீன அரசு .