Categories
அரசியல்

திருப்பூரில் 2 நாளில் 53 பேருக்கு கொரோனா…. இன்று புதிதாக 18 பேர்… பீலா ராஜேஷ்!

 திருப்பூரில் அதிகபட்சமாக இன்று புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து  கொண்டே செல்கின்றது. மொத்தம் தமிழகத்தில் 34 மாவட்டங்கள் கொரோனாவின் பிடியில் இருக்கிறது. அதிகபட்சமாக சென்னை, கோவை,  உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. நேற்று  தமிழகத்தில் 106 பேருக்கு கொரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்,  பாதிப்பு எண்ணிக்கை 1,075  ஆக உயர்ந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சுகாதாரத்துறை செயலாளர்  பீலா ராஜேஷ் மாலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆக 1,173 அதிகரித்துள்ளது. இதில் 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ள 98 பேரில்  அதிகபட்சமாக திருப்பூரில் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. திருப்பூரில்  இரண்டு நாட்களில் 53 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்தம் திருப்பூரில் 78 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதற்கு அடுத்த படியாக இன்று புதிதாக கரூரில் 15 பேருக்கும், மதுரையில் 14 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |