Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஒரே நாளில் 905 பேருக்கு புதிதாக கொரோனா… மொத்த எண்ணிக்கை 9,352 ஆக உயர்வு!

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 905 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, வைரஸ் தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,352 ஆக உயர்ந்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக கடந்த ஏப்.11 தேதி காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். கொரோனா பாதிப்புகள் குறித்தும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மோடி ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தில், பல மாநில முதலைவர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆலோசனையை அடுத்து, ஒடிசா, பஞ்சாப், மேற்குவங்கம், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, தமிழகத்திலும் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், நாளை காலை 10 மணிக்கு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை சுமார் 51 ஆக பதிவாகியுள்ளது. இதையடுத்து உயிரிழப்புகள் எண்ணிக்கை 324 ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ள 9,352 பேரில் 8,048 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 980 ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |