Categories
தேசிய செய்திகள்

மருத்துவம் சார்ந்த அனைத்து தனியார் நிறுவனங்களையும் தேசியமயமாக்க முடியாது: உச்சநீதிமன்றம்

கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்படும் வரை நாட்டிலுள்ள மருத்துவம் சார்ந்த அனைத்து தனியார் நிறுவனங்களையும் தேசியமயமாக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ பணியாளர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), என் 95-முகக் கவசங்கள் ஆகியவற்றின் தட்டுப்பாடுகளை உடனடியாக தீவு காண கோரி வழக்கறிஞர் அமித் சஹானி உள்ளிமருத்துவம் ட்ட 3 பேர் தனித்தனியாக ஒரு பொதுநல மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் நீதிபதிகள் அசோக் பூஷன், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு காணொலி மூலமாக கடந்த 8ம் தேதி விசாரைணக்கு வந்தது. அப்போது, சொலிசிட்டர் ஜெனரல் (எஸ்.ஜி) துஷார் மேத்தா மத்திய அரசு தரப்பில் ஆஜராகி, கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னணி வீரர்களாக மருத்துவர்கள் செயலாற்றி வருகின்றனர்.

அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் தனியார் ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என வாதாடினார். இதையடுத்து, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், அரசு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்களே படைவீரர்கள் என்றும் கூறியது. மேலும் இந்த போரில் மருத்துவர்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதேநேரத்தில் தனியார் பரிசோதனை மையங்கள் கொரோனா பரிசோதனைக்காக அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்றும், அந்த கட்டணத்தை அரசே வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இந்த நிலையில் இதை வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் பரிசோதனை மையங்களில் கொரோனா பரிசோதனையை கட்டணமில்லாமல் மேற்கொள்ள வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

அதில், பெரும்பாலான பரிசோதனைகள் அரசு சார்பில் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பெரும்பாலான பரிசோதனைகள் மருத்துவர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே தனியார் மையங்களில் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிமன்றம் தனியார் ஆய்வகங்களில் கட்டணமில்லா பரிசோதனை நடத்த தேவையில்லை என்று உத்தரவிட்டுள்ளது. அனைத்து தனியார் சேவைகளையும் தேசிய மையமாக்க முடியாது என்று கூறியுள்ளது.

Categories

Tech |