கொரோனா பரிசோதனை ரேபிட் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வருவதற்கு 4 நாள் தாமதம் ஆகலாம் என ஐ.சி.எம்.ஆர் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 96 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழத்தில் சுமார் 34 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தொண்டையில் இருந்து திசுக்களை எடுத்து கொரோனா பரிசோதையானது செய்யப்பட்டு வருகிறது.
இதற்கு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்த உபகரணங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு சுமார் 6 மணி நேரம் தேவைப்படுவதால் ஒரு நாளுக்கு குறைந்த அளவிலான நபர்களையே சோதனை செய்ய முடிகிறது. மேலும் நேர விரயம் ஆகிறது. இதனால் சீனாவில் பின்பற்றிய முறையை பயன்படுத்தி கொரோனா பரிசோதை செய்ய தமிழக அரசு திட்டமிட்டது. அதன்படி 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் கருவிகள் வாங்க ஒப்பந்தம் போட்டப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பரிசோதனைக்காக முதற்கட்டமாக வரவேண்டிய 50,000 கருவிகள் இதுவரை வரவில்லை.
ஏப்., 12ம் தேதி முதல் ரேபிட் டெஸ்ட் தொடங்கும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது வரை வராத நிலையில் துரித பரிசோதனை கருவிகள் தமிழகம் வருவதற்கு 4 நாள் தாமதம் ஆகலாம் என ஐ.சி.எம்.ஆர் அறிவித்துள்ளது. ஏப்., 15ம் தேதி தான் இந்தியாவுக்கே பரிசோதனை கருவிகள் சீனாவில் இருந்து வரும் என ஐ.சி.எம்.ஆர் தகவல் அளித்துள்ளது. ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் 30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவுகள் தெரிந்து விடும், ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேருக்கு சோதனை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.