Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு … மனக்கசப்பு நீங்கும் ….உற்சாகம் பெருகும் நாள் …!!

 மிதுனம் ராசி நேயர்களே…!  இன்று அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர்கள்.  தொழில் வியாபாரத்தில் நிலவி பணி எளிதாக நிறைவேறும்.  ஆதாய பணவரவு இருக்கும்.  இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் ஏற்படும்.  இன்று விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கைகொடுப்பார்கள்.  புதிய வீட்டிற்கு செல்வது பற்றிய முடிவுகளை எடுக்க கூடும்.  பிள்ளைகள் இன்று எந்த ஒரு விஷயத்தையும் கொஞ்சம் கவனமாக செய்ய வேண்டும்.

பிள்ளைகள் நலனில் நீங்கள் கொஞ்சம் அக்கறை  கொள்ளுங்கள். எந்த ஒரு வேலையும் கொஞ்சம் கடுமையாக உழைத்துதான் நீங்கள் செய்ய வேண்டியிருக்கும்.  கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.  உத்தியோகத்தில்  இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும்.   உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்காமல் கூட போகலாம்.  ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்.

உங்களுக்கான  அனைத்து விஷயமும் சிறப்பாகவே நடக்கும்.  இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.  வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும்.  அதுபோலவே இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை  செய்யுங்கள்.  இந்த வருடம் முழுவதுமே நீங்கள் உற்சாகமாகவே காணப்படுவார்கள்.

அதிர்ஷ்டமான திசை :  தெற்கு

அதிர்ஷ்ட எண் :  2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் :   வெள்ளை மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |