துலாம் ராசி அன்பர்களே..! இன்று புதிய பணிகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் அனுகூலத்தை பாதுகாத்துக்கொள்வது நல்லது. அளவான பணவரவு தான் கிடைக்கும். மனைவியின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கையை கொடுக்கும். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வெற்றிகளை குவித்து வாழ்வில் வசந்தம் வீச போகும் நாளாக இன்றைய நாள் இருக்கும். குடும்பத்தைச் சாராத ஒருவரால் தொழிலில் சிரமம் ஏற்பட்டு பின்னர் மறையும்.
பதட்டத்தை தவிர்த்து நிதானத்தை மட்டும் கடைபிடியுங்கள். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். பக்தி மிக்க நாளாகவும் இன்றைய நாள் இருக்கும். இன்றைய நாள் முழு முயற்சியுடன் அனைத்து காரியங்களில் ஈடுபடுவீர்கள். இன்று காதலர்களுக்கு சிறப்பான நாளாகவே இருக்கும். பொன்னான நாளாகவே அமையும். திருமண முயற்சிகளை பற்றி பேச்சுவார்த்தை நடத்துங்கள் திருமணத்தில் முடியும்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் விநாயகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்/ இந்த வருடம் முழுவதும் நீங்கள் உற்சாகமாகவும் காணப்படுவீர்கள்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்