Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி உரையை ஆவலுடனும், கவலையுடனும் எதிர்பார்க்கிறேன் – ப. சிதம்பரம் ட்வீட்! 

 பிரதமர் மோடி உரையை ஆவலுடனும், கவலையுடனும் எதிர்பார்க்கிறேன் என ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.  

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9352 ஆக அதிகரிந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 324ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவில் இருந்து இதுவரை 980 குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

நாளையுடன் ஊரடங்கு உத்தரவு நிறைவடைய உள்ள  நிலையில் இதனை மேலும் நீடிக்குமாறு பல்வேறு மாநில முதல்வர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே தமிழகம், ஒடிஷா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஏப்., 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீடித்து உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா? என்பது குறித்து நாளை பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நிதியமைச்சர் ப. சிதம்பரம், நாளை காலை பிரதமர் மோடி ஆற்றவிருக்கும் உரையை உங்களைப் போல நானும் ஆவலுடனும் கவலையுடனும் எதிர்பார்க்கிறேன். ஊரடங்கை 30-4-2020 வரை நீடிப்பதைத் தவிர்க்க முடியாது என்று தோன்றுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு நீடித்தாலும் மக்கள் வாழ வேண்டுமே? 21 நாட்களாகத் தவிக்கும் ஏழை, நடுத்தர வர்க்க மக்கள் எதிர்பார்ப்பது பண உதவி, அந்த பணம் இருக்கிறது. மத்திய அரசின் 2020-21 செலவு பட்ஜெட்டில் ரூ. 30 லட்சம் கோடி இருக்கிறது. இது நாட்டுடைய பணம், நம்முடைய பணம் இந்த ரூ. 30 லட்சம் கோடியில் ரூ. 65,000 கோடியை மக்களின் பசியைப் போக்க பிரதமர் தருவாரா மாட்டாரா? என்பது தான் கேள்வி. நம்பிக்கையுடன் பிரார்த்திக்கிறேன். நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |