நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில் மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதியில் இன்று ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் துப்பாக்கியுடன் மசூதியில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்மூடி தனமாக சுட்டடான். துப்பாக்கி சத்தத்தை கேட்டு அங்கிருந்த அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது சிலர் கீழே விழுந்தனர்.சிலர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்தக்காயத்துடன் வெளியே அலறியபடி ஓடிவந்தனர்.
இந்த தாக்குதல் பற்றி உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து ஆயுதப்படை போலீசார், சம்பவ நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர் . போலீசார் வருவதற்குள் அந்த நபர் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டான். இதையடுத்து ஆய்வு செய்தபோது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 9 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ள நிலையில், மசூதிக்குள் பலர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் காயமடைந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் போல் அருகில் உள்ள மற்றொரு மசூதியிலும் ஒரு நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தாக்குதல் நடத்திய மர்ம நபர் தாக்குதல் நடத்திய வீடியோவை பேஸ்புக் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோவை சிலர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.
https://youtu.be/OYPDs_S7AXE
இந்த தாக்குதலைத் தொடர்ந்து நகரின் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் மூடப்பட்டு,குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். அப்பகுதிகள் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சந்தேகத்தின்பேரில் ஒருவரை போலீசார் பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த தாக்குதல் குறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆண்டர்ன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்க்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த சம்பவம் நடந்திருப்பதாக கூறிய அவர், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.