Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்…. உடலை வீசி எறிந்த கொடூரம்….. !!

கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை மருத்துவமனை ஊழியர்கள் வீசிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது

ஆந்திரா மாநிலத்தில் இருக்கும் நெல்லூர் பகுதியை சேர்ந்த மருத்துவர் லட்சுமி நாராயணன் ரெட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடலை அம்பத்தூரில் இருக்கும் மின் மயானத்தில் அடக்கம் செய்ய மருத்துவமனை ஊழியர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் மின்மயானத்தின் ஊழியர்கள் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததோடு அப்பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அடக்கம் செய்வதால் கொரோனா தொற்று பரவாது என சமாதானம் செய்ய முயன்றும் எந்த முடிவும் கிடைக்காத நிலையில் மருத்துவமனை ஊழியர்கள் சடலத்தை வீசி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது இதுகுறித்து அம்பத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |