Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : இணைந்து போராடுகின்றோம் – உங்கள் சிரமத்தை உணருகிறேன் – மோடி

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வந்ததால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவின் கடைசி நாளான இன்று காலை 10 மணிக்கு கொரோனா தொடர்பாக 4வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி மக்களிடையே பேசி வருகிறார். அதில் கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம். ஊரடங்கு உத்தரவால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டதை என்னால் உணர முடிகிறது .

Categories

Tech |