இந்தியாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 339ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் தொடங்கி உலக நாடுகளையே கதிகலங்க வைத்துள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்தது. 21 நாள் ஊரடங்கு உத்தரவுக்காக இறுதி நாளான இன்று மேலும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பட வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்த்து வருவதால் மக்களிடையே அச்சம் எழுந்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா 10ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 339ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 2334 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு160 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து மத்தியபிரதேச மாநிலத்தில் 604 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 43 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 1,510 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 28 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.