இந்தியாவில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றது.
சீனாவின் தொடங்கி உலக நாடுகளையே கதிகலங்க வைத்துள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்தது. 21 நாள் ஊரடங்கு உத்தரவுக்காக இறுதி நாளான இன்று மேலும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பட வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்த்து வருவதால் மக்களிடையே அச்சம் எழுந்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா 10ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 1036 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. அதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 2334 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததில் 217 பேர் குனமடைந்துள்ளார்கள். இதனை தொடர்ந்து கேரள மாநிலத்தில் 379 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 198 பேரும், கர்நாடகாவில் 247 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 59 பேரும், தமிழத்தில் 1.173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 58 பேரும் குணமடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.