இந்தியாவில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்க படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறது. இந்தியாவிலும்கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வந்ததால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவின் கடைசி நாளான இன்று காலை 10 மணிக்கு கொரோனா தொடர்பாக 4வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி மக்களிடையே பேசினார். அதில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தாலும் பிரதமர் பேசிய ஒரு கருத்து அனைவரின் கணவத்தை ஈர்த்துள்ளது. அதில், ஊரடங்கில் சில தளர்வு குறித்து நாளை முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும். நோய் தொற்று அதிகரித்தால்,அதிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.
#COVID19 பரிசோதிக்க ஜனவரியில் ஒரு ஆய்வகம் மட்டுமே இருந்தது. தற்போது 220க்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 20-க்கு பிறகு அதிகம் பாதிப்பு ஏற்படாத பகுதிகளில் விதி விலக்குகள் அறிவிக்கப்படும். யாரும் அலட்சியத்துடன் இருக்க வேண்டாம்.. விரிவான வழிகாட்டுதல் நாளை வெளியீடு செய்யப்படும்.
நோய் பரவாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் இந்தியா எடுத்துள்ளது. சமூக இடைவெளியும், ஊரடங்கும் நமக்கு பெரிதும் உதவியிருக்கிறது. நம் நாட்டை பிற நாடுகளோடு ஒப்பிட்டு பார்ப்பது தவறு என்று பிரதமர் தெரிவித்தார். இதில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு அதிகம் பாதிக்காத பகுதிக்கு விலக்கு அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. வீட்டுக்குள் முடங்கி இருந்த அனைவருக்கும் இந்த வரி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.