நம் நாட்டை பிற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்காதீங்க என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறது. இந்தியாவிலும்கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வந்ததால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவின் கடைசி நாளான இன்று காலை 10 மணிக்கு கொரோனா தொடர்பாக 4வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி மக்களிடையே பேசினார். அதில் இந்தியாவில் மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டித்து மே 3 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார். மே 3 வரை எங்கு இருக்கிறீர்களோ, அங்கேயே இருங்கள். யாரையும் வேலையை விட்டு நீக்காதீர்கள். உங்களை சுற்றியுள்ள ஏழை மக்களை கவனித்து கொள்ளுங்கள். முதியோர்களை பாதுகாப்பாக பார்த்து கொள்ளுங்கள். வீட்டில் கூட முகமூடி அணியுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலை பின்பற்றுங்கள்.
வரும் ஒரு வாரத்திற்கு மிக கடுமையான ஊரடங்குகடைபிடிக்கப்படும். விவசாயிகளுக்கு பிரச்சினை இல்லாதவாறு, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. ஒரு லட்சம் படுக்கைகளுடன் கூடிய 600 மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன.நோய் பரவாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் இந்தியா எடுத்துள்ளது. சமூக இடைவெளியும், ஊரடங்கும் நமக்கு பெரிதும் உதவியிருக்கிறது. நம் நாட்டை பிற நாடுகளோடு ஒப்பிட்டு பார்ப்பது தவறு என்று பிரதமர் தெரிவித்தார்.