Categories
அரசியல்

பொள்ளாச்சி பாலியல் சம்பவம்….. திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் சிறப்பு தீர்மானம்…!!

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருந்ததையடுத்து  கூட்டணிக்கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு மற்றும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றார் என்பதை நேற்றைய தினமே முடிவு செய்து இன்று அறிவிக்க இருந்தது. இதற்காக அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயம் வருகை தந்தனர் .

இதையடுத்து கூட்டணி கட்சி தலைவர்களிடம் முக.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார் . இதில்  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ , இந்திய கம்யூனிஸ்ட் துணைச் செயலாளர் வீரபாண்டியன் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் , விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் , காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி ,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் , ஐ.ஜே.கே கட்சியின் நிறுவனர் பச்சமுத்து மற்றும்  ,  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் தேவராஜன் உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்தனர்.

சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கூட்டணி கட்சி அனைவரும் இணைத்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் பொள்ளாச்சி பாலியல் சம்பவ குற்றவாளிகள் மீது உயர்நீதிமன்ற கண்காணிப்பில் C.B.I வழக்கு விசாரணை மேற்கொள்ள சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .இதையடுத்து கூட்டணி கட்சி தலைவர்கள் இணைத்து போட்டியிடும் தொகுதிகளின் பெயர்களை அறிவித்தார்கள்.

Categories

Tech |