Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பை தவிர பிரதமர் மோடி உரையில் புதிதாக ஒன்றுமில்லை – ப. சிதம்பரம் அதிருப்தி!

இந்தியாவை மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்துள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பை தவிர பிரதமர் மோடி உரையில் புதிதாக ஒன்றுமில்லை என ப. சிதம்பரம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். யாரும் அலட்சியத்துடன் இருக்க வேண்டாம். வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர் மோடி, அத்தியாவசிய தேவைக்கு வெளியே வந்தால் தனி மனித இடைவெளி அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஊரடங்கு நீட்டிப்பை தவிர பிரதமர் மோடி உரையில் புதிதாக ஒன்றுமில்லை என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். ஏழைகளின் வாழ்வாதாரமும், உயிர் வாழ்தழும் மத்திய அரசுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை என புகார் அளித்துள்ள அவர், கொரோனா தடுப்புக்கு அதிகம் நிதி தேவை என்ற மாநில அரசுகளின் கோரிக்கைக்கு பிரதமர் உரையில் பதில் இல்லை.

பொருளாதார அறிஞர்களின் அறிவுரைகளை பிரதமர் மோடி கருத்தில் கொள்ளவில்லை. ரகுராம் ராஜன், அபிஜித் பானர்ஜி, பிரபாத் பட்நாயக் ஆகிய நிபுணர்களின் யோசனை விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது என தெரிவித்துள்ளார். 40 நாட்கள் ஊரடங்கு காலத்தில் ஏழைகள் தங்கள் உணவை தாங்களே பார்த்து கொள்ளட்டும் என மத்திய அரசு கைவிட்டுவிட்டது. ஏழைகளிடம் பணம் இல்லை, உணவும் இல்லை, அரசும் பணமோ – உணவோ தரவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |