வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணியும் விவகாரத்தில் குழப்பம் எழுந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடத்தில் இருக்கின்றது. அங்கு மட்டும் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய தேவைக்காக பொருட்கள் வாங்கும்போது வெளியே வருபவர்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று நேற்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று காலை முகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தவர்களிடம் காவல்துறையினர் அபராதம் விதித்தனர். மருந்தகங்களில் முகக்கவசம் இல்லை என பொதுமக்கள் தெரிவித்து கைக்குட்டை, துண்டு, துப்பட்டா கொண்டு முகத்தை மூடி வந்தவர்களையும் நாளை முகக்கவசம் கண்டிப்பாக அணியவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்த காவல்துறையினர் இன்று ஒருநாள் அனுமதி தருவதாக அறிவுறுத்தினர்.
முகக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவில் பல்வேறு குழப்பங்கள் எழுந்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியே செல்பவர்கள் கைக்குட்டை, துப்பட்டா, துண்டு ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறி இருந்த நிலையில் தற்போது காவல்துறையினர் முகக்கவசம் மட்டும் அணிந்து வர கூறி துண்டு, துப்பட்டா, கைக்குட்டை அணிந்தவர்களை எச்சரித்துள்ளதால் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Outside of hospitals the easiest mask available for everyone is a handkerchief, dupatta, angavastram or any reusable homemade mask, provided they are properly sterilised by washing with soap, water and dried under direct sunlight.
— Dr Beela IAS (@DrBeelaIAS) April 11, 2020