தல அஜித் குமார் நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட புதிய கதையில் நடிக்க இருக்கிறார்.
விஸ்வாசம் படத்தை தயாரித்து வெற்றி கண்ட சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் நடிகர் அஜித் கூட்டணி என்பதால் வினோத் திரைக்கதையைக் மிக கூர்தீட்டி கொண்டிருக்கிறார். அஜித் இதுவரை எந்த அரசியல் படங்களிலும் நடித்ததில்லை. நடிகர் விஜய், கத்தி, மெர்சல், சர்கார் படங்களில் அரசியல் வசனம் பேசினார். நடிகர் சூர்யா அடுத்து நடித்து வரும் என்.ஜி.கே படம் அரசியல் படம்தான். அப்படி இருக்கும் சூழ்நிலையில் தற்போது இந்த வரிசையில் அஜித்தும் சேர்ந்து இருக்கிறார்.