Categories
சினிமா தமிழ் சினிமா

ஊரடங்கில் முத்தம் கொடுத்த ரம்யா கிருஷ்ணன்… யாருக்கு தெரியுமா?

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் சார்மிக்கு முத்தம் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து வருபவர் நடிகை ரம்யாகிருஷ்ணன். படையப்பா படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான ரம்யா கிருஷ்ணன், பிரம்மாண்ட இயக்குனரான ராஜமௌலியின் பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் ராஜ மாதாவாக நடித்து தற்போது ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

தற்போது கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சினிமா பிரபலங்கள் உட்பட அனைவரும் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். ஆகவே வீட்டில் உள்ள பிரபலங்கள் பலரும் சமையல் செய்வது, உடற்பயிற்சி செய்வது,பிள்ளைகளுடன் பொழுதை கழிப்பது என எதையாவது செய்து வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்

இந்த நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களிடம் பேசி வருகிறார். ரம்யா கிருஷ்ணனின் தீவிர அடிமையாக இருந்து வருகின்றார் நடிகை சார்மி.இவரும் ரம்யாகிருஷ்ணனும் அடிக்கடி வீடியோ கால் பேசி வருகின்றனர். அப்போது ரம்யா கிருஷ்ணன் கொடுத்த முத்தத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் சார்மி. இதனை தற்போது அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்..

Categories

Tech |