இந்தியாவில் வெளவால்களுக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நிபா வைரஸ் பரவியபோது இது வெளவால்களினால் பரவுகின்றது என்று ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்பதை உலக நாடுகள் பலவும் ஆராய்ச்சி செய்த வரக்கூடிய நிலையில் இந்தியாவை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சிக்குழுவும் பல்வேறு வளர்ப்புப் பிராணிகளின் மூலம் கொரோனா பரவுகிறதா என்று நிறைய சோதனைகள் மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக வெளவால்களுக்கு இந்த சோதனைகள் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு, கேரளா, இமாச்சல பிரதேசம் மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட வெளவால்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் கொரோனா இருப்பது உறுதி செய்ய பட்டு இருக்கிறது. அதே போல குஜராத், தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட வெளவால்களின் மாதிரிகளை சோதனை செய்த போது அதில் கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது.
இந்த சோதனைகள் சரியானதுதானா, மனிதர்களுக்கும், வெளவால்களுக்கு ஒரே மாதிரியான முடிவு தான் இருக்குமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.இது சரியானதுதானா உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் அடுத்தடுத்த கட்டங்களாக நடைபெற இருக்கின்றது.எனினும் முதல்கட்ட ஆய்வு மட்டும் தற்போது வந்துள்ளது. இது மட்டுமல்ல நாய், பூனை உள்ளிட்ட மற்ற விலங்குகளில் இருந்தும் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் அச்சப்பட தேவையில்லை என்றும், இது ஆரம்பக் கட்ட பரிசோதனை தான் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.