கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிக ரூ.5 கோடிக்கு நிவாரண பொருட்களை வழங்கும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 205 நாடுகளுக்கு பரவி உயிர்களை காவு வாங்கிய வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரசால் 338 பேர் உயிரிந்துள்ள நிலையில் 10,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் ஏப்., 21ம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,173ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண நிதி வழங்க முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து ஏரளாமானோர் நிதியுதிவி அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேமுதிக சார்பில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். நிவாரணப் பொருட்கள் ஊரடங்கு உத்தரவு முடிந்து மே 3ம் தேதிக்கு பிறகு வழங்கப்படும். மே 3ம் தேதிக்கு பின்னர் கழக நிர்வாகிகள் ஒவ்வொரும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க தயாராக இருங்கள் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் – ரூ. 5 கோடி, சக்தி மசாலா நிறுவனம் – ரூ. 5 கோடி, ஏசியன் பெயிண்ட் நிறுவனம் – 2 கோடி கொடுத்துள்ளதாக தகவல் அளித்துள்ளனர். மேலும் திமுக சார்பில் ரூ. 1 கோடி மற்றும் , டிடிவி தினகரன் ரூ. 1 கோடி, தமிழக ஆளுநர் ரூ. 1 கோடியும் அளித்துள்ளனர். மேலும் பல திரையுலக பிரபலங்களும், நிறுவனங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் நிதியுதவி அளித்துள்ளனர்.