Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு எச்சரிக்கை….. எது நடக்க கூடாதுனு சொன்னாரோ, அது நடந்துடுச்சு …!!

இந்தியாவில் வெளவால்களுக்கு கொரோனா பரவியுள்ளதால் புதிய சிக்கல் எழுந்துள்ளது.

உலகையே மரண பீதியில் ஆழ்த்தியுள்ளது கொரோனா வைரஸ். இதனால் ஒட்டுமொத்த நாடும் முடங்கியுள்ளது. இதுவரை இந்த வைரஸுக்கான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கின்றது. இதற்க்கு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்கள், விஞ்சானிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவுகிறது என்றும், எப்படி பரவுகின்றது என்றும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றது.

Sick vampire bats isolate from friends but continue to care for ...

இதுகுறித்து கனடா நாட்டின் வனத்துறையினர் கூட்டுறவு அமைப்பான CWHC வெளவால்கள் மூலம் கொரோனா பரவுமா என்று ஆய்வு நடத்திக்கொண்டு இருக்கின்றது. இதனை நிறுத்துமாறு வின்னிபெக் உயிரியலாளர் கிரேக் வில்லிஸ் பரிந்துரைத்தார். அதில் கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து வெளவால்கள் பரவுவது அபூர்வம் தான். ஆனால் அப்படி பரவினால் அது பயங்கரமான பேரழிவை உண்டாக்கும் என்று எச்சரித்தார். ஒரு வெளவால்களுக்கு கொரோனா பரவி விட்டால் பல மில்லியன் வெளவால்கள் கொரோனவை பரப்பும் உயிரினமாக மாறி விடும்.

இதையும் படியுங்க : அதுக்கு மட்டும் கொரோனா வந்துடுச்சு உலகிற்கு பேரழிவு தான் – எச்சரிக்கும் ஆய்வாளர் …!!    

வெளவால்கள் மூலம் பரவுவதற்கான வாய்ப்பு குறைவு என்றாலும், அப்படி பரவினால் விளைவு கொடூரமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். இவரின் இந்த எச்சரிக்கை தற்போது இந்தியாவை மிரள வைத்துள்ளது. ஏனென்றால் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இந்தியாவில் உள்ள வெளவால்களுக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்துள்ளது.

இதையும் படிக்கவும் : இந்தியாவில்….!! ”வெளவால்களுக்கு கொரோனா”…அதிர்ச்சி தகவல்

தமிழ்நாடு, கேரளா, இமாச்சல பிரதேசம் மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களில் இருந்த வெளவால்களில் பெறப்பட்ட மாதிரிகளில் கொரோனா இருப்பது உறுதி செய்யபட்டுள்ளத்தாக தெரிவித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் குஜராத், தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ள வெளவால்களின் மாதிரிகளில் கொரோனா இல்லை என்று தெரிவித்தது. இருந்தாலும் இது குறித்து முழுமையாக ஆய்வு செய்து வருகின்றோம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |