நமது சருமத்தின் வகை அறிந்து அதற்கு ஏற்றவாறு மாதம் ஒருமுறையேனும் இறந்த செல்களை நீக்க வேண்டும். பொதுவாக வாரம் ஒருமுறை இறந்த செல்களை நீக்குவது சருமத்திற்கும் முகப்பொலிவிற்கும் மிக நன்மை தரும்.
இயற்கை பொருட்களை கொண்டு இறந்த செல்களை நீக்குவது எப்படி என தெரிந்துகொள்ளுங்கள்..
1 ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை பஞ்சால் எடுத்து கொண்டு ஒத்தடம் போன்று கொடுத்து, 10 நிமிடத்திற்கு பிறகு முகத்தை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து கொடுத்து வந்தால் இறந்த செல்கள் நீங்கி விடும்.
பப்பாளி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் மற்றும் தேன் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து 30 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், சருமத்திற்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, சருமம் அழகாக காணப்படும்.
2 துண்டு பப்பாளியை எடுத்து கொண்டு நன்றாக மசித்து 1 ஸ்பூன் சர்க்கரையுடன் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடத்திற்கு பிறகு முகத்தை கழுவலாம். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் இறந்த செல்களை உடனடியாக அகற்றி விடலாம்.
1 ஸ்பூன் சூரிய காந்தி எண்ணெய்யுடன்1 முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து கொண்டு முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். பின் 20 நிமிடம் கழித்து முகத்தை அலசவும். இதில் முட்டையின் வெள்ளை கருவிற்கு இறந்த செல்களை அகற்றும் தன்மை உள்ளது.
காபி பொடியுடன் தேனை நன்கு கலந்து கொள்ள வேண்டும். அடுத்து இதனுடன் எலுமிச்சை சாற்றை கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். தொடர்ந்து செய்து வந்தால் இறந்த செல்கள் விரைவிலே நீக்கி விடும்.
சர்க்கரையை லேசாக பொடி செய்து கொண்டு, அதில் சிறிது தண்ணீர் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்கரப் செய்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்தால், சர்க்கரையானது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் மாசுக்களை வெளியேற்றிவிடும்.
2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை எடுத்து கொண்டு முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் கொடுக்கவும். பிறகு வெது வெதுப்பான நீரில் முகத்தை அலசவும். இதனை வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவலாம். ஸ்ட்ராவ்பெரியில் உள்ள வைட்டமின் சி, இறந்த செல்களை அகற்றி பொலிவை தரவல்லது.
கற்றாழையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சுத்தப்படுத்தும் தன்மை, ஈரப்பதமூட்டும் தன்மை போன்றவை நிரம்பியிருப்பதால் கற்றாழையை கொண்டு சருமத்தைப் பராமரித்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.